இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. காரி
(அறுசீர் விருத்தம்)
மலையெல்லாம் தேன்வழிய,
வயலெல்லாம் தேன் வழிய,
மலையின் சாரல்
உலையெல்லாம் தேன் வழிய,
ஓவியமாம் தமிழ்ப்பெண்கள்
ஒப்பில் லாத
சிலைவிழியில் தேன் வழியச்,
செந்தமிழில் தேன் வழியத்
திளைத்து வாழ்ந்த
மலையமான் திருமுடியே!
உனைப்பாட நீயில்லை!
வருத்தந் தானே!
தீந்தமிழின் துறைபோன
அம்மூவனார், பரணர்,
கபிலர், செஞ்சொல்
ஆய்ந்துணர்ந்த நப்பசலை
எனும்புலவர் உனைப்புகழ்ந்தார்;
அவர்போல் நானும்
வாய்திறந்து பாடுகின்றேன்.
உன்னின்மாம் அழகப்ப
வள்ளல் நாட்டில்!
ஈந்துவந்து பாராட்ட
எவருள்ளார் என்கின்ற
வருத்ததி தானே!