பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


‘தென்னாட்டில் இரவலருண்(டு)’ 1
        என்றுரைக்கும் செய்தியெல்லாம்
                அல்லிக் 2 காக்கிப்
பொன்னீட்டிப், புகழீட்டித்
        தமிழ்காக்கப் பெரும்புலவர்
                வறுமை போக்கி
அந்நாளில் வாழ்ந்திருந்தான்
        திருமுடியே! அழகப்பன்
                பின்னாள் வந்தான்!
இந்நாளில் வள்ளலில்லை,
        தமிழில்லை என்கின்ற
                வருத்தந் தானே!
மயிலுக்கும், முல்லைக்கும்
        மற்றவர் போல் வாரிவாரி
                வழங்கி டாமல்,
இயலிசைகூத் துணர்ந்தோர்க்கும்,
        பாடிவந்த இனிய தமிழ்ப்
                பாவ லர்க்கும்
வயலுழுதே உரமிட்டு
        விதைதெளித்து வான்பார்க்கும்
                உழவன் போற்றும்
பெயலானான் மலையன்!சீர்
        பேசாத வாயெங்கும்
                கண்ட தில்லை!

அருந்தமிழுக் கேவாழ்ந்தான்;
        தன்னையொத்த அரசருக்கும்
                தோள்கொ டுத்தான்;
திருவெல்லாம் பொதுவாக்கித்
        திகழ்மனையின் கிழத்திக்குக்
                கொடுத்தான் மார்பைத்