12
திருக்கோவ லுரர்வாழ்ந்தான்!
காரிநோக்கித் திரண்டுவரும்
புள்ளைப் போலப்
பெருங்கூட்டம் தமிழ்க்கூட்டம்
பாட்டிசைக்கும் பெற்றியினைப்
பேசப் போமோ?
5
தமிழுக்கும், தமிழ்நாட்டு
மன்னருக்கும் தடந்தோளின்
தகைமை காட்டித்
தமிழுக்கும், தமிழ்நாட்டுப்
பெரும்புலவர் இனத்திற்கும்
தாய்போல் நின்று
தமிழுக்கும் புகழ்சேர்த்தான்;
தமிழ்வளர்த்தான்; தமிழ்நாட்டைத்
தாக்க வந்த
உமிச்சிறகுக் கொசுக்கூட்டம்
ஆரியரின் ஓட்டத்தை
உரைக்கப் போமோ?
6
வடக்கிருந்து வந்தவரை
வாள்முனையில் வெற்றிகொண்டான்
மலையன்! அந்த
வடக்கிருந்து வருமெதுவும்
தமிழுக்குப் பகையென்றால்
பகைந மக்காம்!
அடக்கத்திற் கெல்லையுண்டே!
அன்னைக்கும், அருந்தமிழ்க்கும்
தொல்லை என்றால்
கிடக்கட்டும் என்றிருக்கும்
கீழ்ச்செயலோ நாம்செய்வோம்?
கிடையா தென்றும்!
7