13
போரினிலே கிடைத்தபொருள்
தமிழ்க்களித்துப் புகழ்சேர்த்தான்
வள்ளல் காரி!
கூரையிலே கூடடையும்
சிட்டிற்கும் தாய்ப்பேச்சு!
குளிர்மைப் பேச்சாம்!
ஊரினிலே வாழ்கின்றோம்;
உயர் தமிழர் என்கின்றோம்;
உதவாப் பேச்சு!
‘யாரினிமேல் தமிழ்காக்க?’
எனுங்கேள்வி எழும்பாமுன்
எழுந்து வாரீர்!
8
உன்னைப்போல் தமிழ்காக்க
ஒருகாரி இந்நாட்டில்
உயிர்த்தால் போதும்!
பின்னிங்கே வேற்றுமொழி
வருகின்ற பேச்செடுத்தால்
பிணந்தான் வீழும்!
இந்நாட்டார் தமிழ் நாட்டார்,
இன்றுள்ள அரசியலார்
எல்லாம் மாறிப்
பொன்னாட்டைப் புனல்நாட்டைத்
தமிழ்நாட்டை வாழ்விக்கும்
புலிப்போத் தாவார்!
9
பாய்புனல்சூழ் தமிழ்நாட்டின்
வீரத்தை, நற்பெயரைப்,
பண்பை விட்டே
வாயில்லாப் பூச்சியானார்
கொல்புலிகள்! மறத்தோளும்
சூம்பற் றோளோ?