உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

(வேறு)

அந்நாளில் வயலுழுது விதையைத் தூவி
      ஆன மட்டும் விளைவறுத்துக் கொண்டு வந்தான்!
இந்நாளில் தமிழரசில் வேற்று நாட்டார்
      எந்தெந்த முறையினிலே விளைவைச் செய்து
பொன்விளைத்து வருகின்றார் என்று கண்டான்;
      புதுமுறையைக் கைக்கொண்டான்; வளரு கின்றான்!
முன்னேற்றம் கைவிட்டான் இல்லை! நெல்லின்
      முடியேற்றம் குடியரசின் ஏற்ற மாமே!
மண்ணுழுது பிளப்பதற்கே பொறிகள்; நீண்ட
      மலையுடைத்து நீர்பாய்ச்சப் பொறிகள்; தீய்க்கும்
கண்ணுக்குத் தெரியாத செந்நெல் நோயைக்
      காப்பதற்கு நன்மருந்து யாவும் தந்தே
உண்ணுதற்கே உணவளிக்கும் உழவர் வாழ்வை
      உயர்த்துவதே தமிழரசின் உயர்ந்த நோக்கம்!
மண்ணுழுவோம்; விளைவடைவோம்! அஞ்சு கத்தின்
      மகனரசை வாழ்த்திவளம் அடைவோம் நாமே!

(வேறு)


மயிலாடு பாறைகளும், பூத்திருக்கும் நல்ல
      மலராடு சிறுகாற்றும், சிற்றூரின் மேற்கே
கயலாடு பூங்குளமும், பூங்குளத்தைச் சார்ந்த
      கதிராடு நன்செய்யும், காயாடு தோப்பும்,
பெயலாடு பூங்குழலார் நீராடு பேச்சும் (தேய்ந்த
      பிறர்க்கென்றே நாளெல்லாம் உழைத்துழைத்துத்
வயலாடு மாட்டுழவன் உலகிற்கே தந்த
      வளமன்றி வேறுண்டா? வாய்திறக்கப் போமோ?

விள்ளவிள்ளக் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் நீல
      விரிவான் போல் புகழ்சேர்க்கும் தமிழ்மறையைத் தந்த
வள்ளுவனும் நல்லுழவன்! மரமண்டை மக்கள்

      வளர்வதற்கும் வாழ்வதற்கும் கரம்பேறிப் போன