பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

தடுப்புக்குப் பஞ்சமில்லை! வீட்டிலுள்ள மூத்த
      தாய்தந்தை வயிற்றுக்குப் பஞ்சமில்லை! என்றும்
அடுப்புக்குப் பஞ்சமில்லை! உலையேற்றி வைக்கும்
      அரிசிக்குப் பஞ்சமில்லை! அறிந்துணர்வீர் நன்றே!

நெடுஞ்சாலை ஓரத்தில் நிழலிருக்கக் கண்டு
      நின்றிருந்து வாழ்வது தான் நம்மக்கள் வாழ்க்கை!
படுபஞ்ச நிலையினிலா பலகுழந்தை வேண்டும்?
      பைந்தொடியீர்! பண்போடு நாட்டகத்தே வாழ
அடைத்திடுவீர் கருவழியை! அதிலென்ன குற்றம்?
      ‘அடபாவி!’ எனச்சொல்லி எனையேசி னாலும்
தடுத்திடுவீர்! பலபிள்ளை வேண்டாமே என்றும்!
      தாய்மாரே! தாய்மாரே! எனக்கெஞ்சு வேனே!
சாவெல்லாம் குறைந்ததுவே தகுமருந்தி னாலே!
      தாய்மார்கள் பெறுவதைத்தான் குறைக்கவில்லை [இன்னும்!

காவெல்லாம் மனையாக்கிக் குடியிருக்க வைத்தும்
      கடுங்குளிருக் கிடமில்லை; காணுகின்ற உண்மை!
மாவெல்லாம் ஒருசிலர்கள் உண்டாலும் மக்கள்
      வயிற்றுக்குச் சோறில்லை! இந்நிலை தான் நாடு!
பாவேந்தன் சொல்கின்றேன்: பன்மக்கள்4 பெற்று
      நானடையும் பெருந்தொல்லை போட்டிலடங் காதே!

ஒன்றிரண்டு நன்மக்கள் போதுமடா அண்ணே!
      ஓயாத தொல்லையடா பலபிள்ளை அண்ணே!
நன்றாக எண்ணிப்பார் நான் சொல்வு, துண்மை!
      நாளாக நாளாக நீயறிவாய் உண்மை!
என்றென்றும் நீவாழ, இல்லாளும் வாழ,
      எழிலோடும் பொருளோடும் உன்னில்லம் வாழ
ஒன்றிரண்டு போதுமடா, போதுமடா அண்ணே!

      உன்கருவை அடைக்கவழி தேடிடு நீ அண்ணே!