126
தடுக்கினிலே ஒரு குழந்தை தவழுகின்ற போது
தாயினுக்கும் தந்தைக்கும் பெருமகிழ்ச்சி பொங்கும்!
அடுக்கடுக்காய் ஆண்டுதொறும் ஒவ்வொன்றாய்ப் பெற்றால்
அன்பிற்கும் இடமுண்டோ? நோய்க்கிடமே உண்டாம்!
கெடுப்பதற்கோ பலபிள்ளை? வாழ்வதற்கோ பிளளை?
கிளிபோல ஒன்றிரண்டு போதுமம்மா! போதும்!
தடுத்திடுவோம் கருப்பாதை! தவறொன்றும் இல்லை!
சரியான வழியிதுதான்! குடும்ப நலம் ஓங்கும்
நகைப்போடே உன்னில்லம் எந்நாளும் வாழ
நான் சொல்லும் செய்தியினைக் கேட்டிடா அண்ணே!
திகைக்காதே! தீமையில்லை சீர்திருத்தக் கொள்கை!
செழுந்தமிழர் வாழ்வுக்கோ இது புதுமை யில்லை!
முகப்புயரும்; வாழ்வுயரும்; முதிர்ந்தபொருள் சேரும்;
முகமுயரும், அகமுயரும்! முன்பின்எண் ணாமல்
வகையாகச் செவ்வண்ண முக்கோணம் சேர்வாய்!
◯
நாள்: 30-11-1969.
இடம்: தமிழ் நாட்டரசின் கடலூர்க் குடும்பக் கட்டுப்பாட்டுத் துறையினரால் கடலூரில் நடத்தப்பெற்ற குடும்ப நலக் கவியரங்கம். தலைவர்: தமிழ் நாட்டரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மாண்புமிகு கா, வேழவேந்தன், பி. ஏ., பி. எல்.
தலைப்பு: குடும்பக் கட்டுப்பாடு.
1. தமிழ் நாட்டரசின் தொழிலாளர் நல மந்திரி மாண்பு மிகு வேழவேந்தன்.
2. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள்.
3. நந்து இரியார் - ஐயர்வு கெடாதவர்.
4. கவிஞர்க்குப் பெண் குழந்தைகள் ஐந்தும், ஆண்
குழந்தைகள் நான்கும் ஆக மொத்தம் ஒன்பது குழந்தைகள்!