பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பொன்பூத்த புன்னைப் பொறிவண்டை வெண்ணிலவு 'இன்னும் உறங்குதியே! என்றெழுப்பும் பாலொளியால் ஏரார் மணிமாடம் எங்கும் நிறைந்திருக்கும்! - சீரார் புதுவைச் சிறப்பு! - அவையடக்கம் (நேரிசைக் கலிவெண்பா) சிந்துக்குத் தந்தை; செழுந்தமிழைத் தென்னட்டார் வந்திக்கச் செய்தனன் மாக்கவிஞன்:-முந்தை இருந்திங்கே பாடி எளிய தமிழ்ப் பாட்டால் விருந்தளித்த மேலோன்; விறலோன்:-அருந்தமிழ்ப் பாரதியைக் காத்தே படைப்பயிற்சி தந்ததையும் ஊரறியும்; ஊராகும் ஒண் புதுவைச்-சீரார் கவியரசர் பாரதி தாசன் கவியைப் புவியறியும்; என்னசான் பொற்பைச்-செவியறியும்! செந்தமிழ்ப் பாக்கள் சிறப்பை அவர்வழி வந்த வழியோர்கள் வாக்குணர்த்தும்!-இந்தப் புதுவைக் கடற்கரை வானெலிப் பூங்கா இதுநாள் உணர்த்தும் இசையில்-புதுமைக் கருத்தேற்றும் எங்கள் கவியரசர் பாடல் உருத்தோன்றும் நற்றமிழ் உற்ற-பெருமைபல தோன்றும் அவையுள்ள தோழரே! தாய்மாரே! ஆன்றவிந் திங்கே அடங்கிய-சான்ருேரே! என்கவிதை எள்ளாமல் இன்மழலைச் சொல்லென்னி என்.வணக்கம் ஏற்பீர் இனிது! - சாதாரண ஆண்டு (இன்னிசைக் கலிவெண்பா) அத்தான்'என் அத்தானே! அன்பே எனதுயிரே! எத்தை நினைத்தேதோ எண்ணிச் சிரிக்கின்றீர்!