பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஊருக்கா? இங்குள்ள உங்களுக்கா? எங்களுக்கா? பேருக்கே ஏதேனும் பேசலாம்! உண்மையோ? வண்டின்மேல் தான்கொண்ட அன்பின் வளத்தாலே அண்ட அழைத்தே அருந்தநற் றேன்.தந்தே கொண்ட குறிக்கோள் குலப்பெருக்கம் கொண்டதுவே! கண்டு வருகின்ருேம்! அன்பின் கலப்பிதுவாம்! 染 裘 酱 பூநக்கி நக்கிப் பொழுது புலருமுன்னே பூநக்கி' தேனெடுத்துப் போவதுவும், அத்தேனேக் கூண்டில் அடைத்துக் குலப்பெருக்கம் காண்பதுவும் ஆண்டான் அடிமைபோல் என்றும் அயராமல் பெண்ணரசி வண்டேவல் பேணி நடத்தியே கண்ணரசு தேன் கூட்டைக் காப்ப தெதனலாம்? வண்டொலிக்கும் முன்கை மலரே! இதைக்கேட்டு வண்டென்றே என்னை மனத்துள் நினையாதே அண்டை அயலார் எனச்சிரிப்பர்! நற்கவிஞர் கண்டதைத்தான்சொல்வர் கலப்பிருக்கும்! அவ்வளவே! அன்பின் வழிய துயிர்நிலை! அஃதறிவோம்! செம்பொன் நிறத்தழகி இன்னும் நான் செப்பக்கேள் : செம்பருத்திப் பூக்கொண்டைச் சேவல் தலைதாழ்த்தித் தும்பைச் செடிநீழல் தூங்குகின்ற பெட்டையினைக் கூவி அழைக்கக் குதித்துச் சிறுபெட்டை தாவி அதனருகில் சார்தலும் அன்பலவோ? நல்ல தலைவர் நடந்துவரும் காட்சிபோல் கொல்லைப் புறத்தினிலே குஞ்சுகள் பின்தொடரப் பெட்டை தலைதூக்கிப் பின்முன்னும் பார்த்துவான் வட்ட மிடுங்கழுகைக் கண்டு மரநிழல் -