133 மஞ்சள் அரைத்தாள்; வரிவீழ்ந்த தன்முகத்தில் அஞ்சு விரல்கொண்டே அப்பினாள்! நான்சிறுவன்! 'பாட்டி! இதுவென்ன பாங்(கு)?’ என்றேன்! அக்கிழவி நீட்டிய சொல்லாற் பழைய நினை(வு)!' என்றாள்! சாயும் நிலவொத்த தண்மதியே! நீபுதுப் பாயாய் இருந்து பழம்பாயாய்ப் போய்விட்டாய்! ஆனால் வயதிற்கும் அன்பிற்கும் நற்றொடர்பு கூனாய் விடுவதில்லே! கூறக்கேள்: நான்கிழவன்! என்றாலும் அன்போ இளமை நிறைந்ததுவாம்! பொன்றுந் துணையும் புதுப்பொலிவு கண்டதுவாம்! சிற்பி செதுக்கிச் சிலையாக்கி வைத்துநற் பொற்புடைய கல்லின் புதுச்சிலையாய் நின்றாய்நீ! கண்டேன்; களிகொண்டேன்; கண்மணியி னூடேநான் கொண்டேன்; உனைநான் அடையும் குறிக்கொண்டேன்; வந்தேன்; இருந்தேன்; வழிபார்த்து நின்றிருந்தேன்! செந்தேன் அடைகாக்கும் தேன்வண்டைப் போலுன் அண்டை இருந்தாள் அவளேயும் ஏமாற்றிக (தாய் கெண்டை விழிகாட்டிக் கீழ்நோக்கி மேல்நோக்கித் தண்டெடுத்து வந்த தமிழச்சி போலொருநாள் வண்டொலிக்க வந்த வழியை மறப்பேனோ? சித்திரைத் திங்கட் சிறுகுளத்துப் பூப்போலச் சித்திரைத் திங்கள் திருமுகத்தால் என்னை வரவழைத்தாய்; வந்தேன்; மறைவிடத்தில் நின்றே குரைத்திருக்கும் நாய்காட்டிக் கொல்லாமற் கொன்றே மறைந்தாய் மலர்க்கொடியே! நான்மறக்கப் போமோ? நிறைந்தாய் உளத்தில் நிலைத்தது நல்லன்பாம்! வண்டோச்சி வந்து மருங்கணையும் செய்தியெலாம் பண்டைத் தமிழ்நூல் படித்ததுண்டு; செய்ததில்லை!
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/134
Appearance