பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. விடுதலை (எண்சீர் விருத்தம்) வான்நோக்கி நீண்டுயர்ந்த மலையுச்சிச் சாரல் வளைந்துதவழ் நீளருவி எழுந்துவரு திங்கள் மான்நோக்கிப் பிணை தாவி விளையாடு பாறை வருவழியின் எதிர்ப்பெல்லாம் தூளாக்கிக் கொண்டு தேன்நோக்கிப் பாட்டிசைக்கும் வரிவண்டிற் கேற்பச் சிறுமுழவைப் போலிசைத்து ஆற்றேடு சேர்ந்து கூன்நோக்கி எதிர்த்தெதிர்த்தே குறுக்கீடில் லாமல் குலந்தழைக்க வாழ்வதுவே விடுதலையென் போமே! கார்தேங்கும் நீளேரிக் கரையேறிப் போனேன்; காற்றினிலே படபடக்கும் நீண்டபனை யோலைக் கூர்தேங்கும் நுனியினிலே குருவிகளின் கூடு குடிசெய்யும் சிற்றுார்போல் கலகலப்பைக் கூட்டச் - சீர்தேங்கும் விடுதலையின் சிறகடித்துப் புட்கள் செயலடிமை யில்லாமல் சிறந்திருக்கக் கண்டேன்! பார்தேங்கும் வாழ்க்கையிலே எவ்வுயிரும் எந்தப் - பணிப்பின்றி உயிர்வாழல் விடுதலையென் போமே! நீண்டிருந்த தென்னையிலே செம்மூக்குப் பச்சை நிறக்கிளிகள் இணைந்தினைந்து சிறகடித்துத் தாவி ஆண்டிருந்த பசும்புதரில் செங்கோவை: கோதி - அச்சமின்றி அடிமையின்றி ஆல்விழுதில் ஆடும்! ஈண்டிருந்த எவ்வுயிரும் விடுதலையில் என்றும் இனிதிருந்து வருதலையே எண்ணியெண்ணி மேலோர் மாண்டாலும் விடுதலையில் மாள்வதுவே இன்பம்! மக்களினப் பிறப்புரிமை விடுதலையென்பாரே!