உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


தலைப்பு: 'சித்திரைச் செல்வி'-பாட்டுடைக் கவியரங்கம்.

அமைப்பு: புதுவை வானொலி நிலையம்-புதுவை அரசின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கச் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பெற்ற பல்துறைக் கலைவிழா.

குறிப்பு: பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ் விழாவின் நிகழ்ச்சிகளை 14-4-1971 மாலை 6-15 மணிக்கும், இரவு 8-15 மணிக்கும் புதுவை வானொலி நிலையம் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியது.

1. 'மதுவுண வன்றிப்' - வேறு பாடம்.

2. எட்டையபுரம் நரசிம்மனால் இசையமைக்கப்பெற்று, புதுவை லோகநாதனால் புதுவை வானொலி நிலைய இசைக் குழுவினருடன் பாடப்பெற்று. 14-4-1971 இரவு 8-15 மணிக்குப் புதுவை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட இசைப்பாடல்.

3. நகைப்பேச்சு - முத்துமாலை என்னும் நகை பற்றிய பேச்சு; இன்பப் பேச்சு; விளையாட்டுப் பேச்சு.

4. சாதாரண - கடந்த தமிழ் ஆண்டின் பெயர்.

5. விரோதி - நிகழும் புதுத் தமிழ் ஆண்டின் பெயர்.

6, வைகுதல் - முறையே புணர்தல்; நீங்குதல்; விடிதல்.

7. குமுதாயம் - மக்கட் கூட்டம்; சமுதாயம்.

8. சாலை - முறையே பள்ளிச்சாலை; வீதி.