உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 இருட்பெருக்கம் போக்கு தற்கோ ஒளிப்பெருக்கம் (வேண்டும்: இடைப்பெருக்கம் போக்குதற்கோ நடைப்பெருக்கம் (வேண்டும்: மருட்பெருக்கம் போக்குதற்கோ மனப்பெருக்கம் - (வேண்டும்; வாய்ப்பெருக்கம் போக்கு தற்கோ நூற்பெருக்கம் - (வேண்டும்: உருட்பெருக்கம் போக்குதற்கோ வழிப்பெருக்கம் (வேண்டும்: ஊன்பெருக்கம் போக்குதற்குப் பசிப்பெருக்கம் - (வேண்டும்; திரட்பெருக்கம் போக்குதற்குச் செயற்பெருக்கம் - (வேண்டும்: சித்திரைப்பெண் இவையெல்லாம் செயற்படுத்தி (வைப்பாள்! விலைவாசி யேற்றத்தை மிகுவிரைவில் தாழ்த்த விளைபொருட்கள் பெருக்கத்தை மிகுவிரைவிற் (சேர்ப்பாள்: கலைசெழிக்க உளஞ்செழிக்கக் கார்வானம் செழிக்கக் கற்கின்ற கல்லூரி உயர்பள்ளி செழிக்கத் தலைவாரி முகம்பார்க்கும் கண்ணுடி போன்ற . . தளிர்வாழை இலையுணவு பல்சுவையிற் செழிக்கச் சிலைவிழியாள் சித்திரைப்பெண் செயற்படுத்தும் இல்லச் செழிப்பினிலே நம்நாடு விழிப்படையும் நீடே! Ο நாள்: 13-4-1971 செவ்வாய் மாலை 6.30-8-00. இடம்: புதுவை-காந்தி திடல்,