148 சித்திரைச்செல்வியின் செயல் வறுமையும் நீள்பிணியும் மலிந்திருக்கும் நாட்டில்: மணம்பெற்ற விரோதியும் சித்திரைப்பெண் ணுளும் முறைமுறையே வழிகாட்டி முன்னேற்றம் காட்டி முனைந்துபணி புரிவாரோ எனுமையம் வேண்டாம்: நெறிமுறையில் பகைவர்க்கும் அருள்கவெனும் ஆன்ற நிலைமாருள் சித்திரைப்பெண் என்றென்றும் நல்ல குறியுடையாள்; குலவிளக்கு; கொடுமையினை மாற்றிக் குடிசெய்வாள்; அவள் வழியே வளம்செழிக்கும் நாடே! கைத்தொழிலைப் பெருக்கிடுவாள்; கார்பொய்த்த போதும் கழனிகளை விளைத்திடுவாள்; கல்விநலம் சேர்ப்பாள் : மெய்த்தொழிலை விரும்பாத சோம்பேறிக் கெல்லாம் விளக்கத்தைத் தந்துடலின் நலம்சேர்க்கச் செய்வாள்; பொய்த்தொழிலைப் போர்த்தொழிலைப் பொறுப்பேற்று . (நீக்கிப் பொதுவான குமு ஆாயம்பொலிங்ே தாங்கச் செய்வாள்; வைத்திழந்து போகாமல் மாற்ருர்க்கும் ஈந்தே வாழ்வாங்கு வாழ்ந்திருக்க வழிகாட்டி யாவாள்! "சாலையிலே தாய்மொழியும் பிறமொழியும் கற்றுத் தகுவேலை கிடைக்காமல் தவிக்கின்ற மக்கள் காலையிலே எழுந்திருந்து பல்துலக்கி யுண்டு கவலையொடு கலையாத உடையணிந்து கொண்டு சாலையிலே திரிவதல்லால் வேறென்ன செய்வார்? தாய்தந்தையின் குறைவா? அரசாள்வோர் போக்கோ? வேலையிலே இழிவான வேலையென்ப தில்லை! - வெறுக்காதீா! எனச்சொல்லி மேன்மைபெறச் செய்வாள்!
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/149
Appearance