170 வற்றது பாயும் வளர்பொன்னி ஆற்றைப்போல் உற்ற நாள் எல்லையெலாம் ஒண்டமிழே மூச்சாகப் பாட்டுலகில் வெற்றிப்படை நடத்தி வாழ்ந்திருந்தார்; தீட்டாத ஒவியமாம் செந்தேனத் தமிழ்மொழியைப் பாட்டிற் புரட்சி பலவிளக்கித் துாயதமிழ் حسجيي நாட்டிற் களித்த நற்கவிஞர் மறத்தோளர்: }ഖ ട്ര மருளே மிகுந்திருந்த மக்கள் மனத்தின் இருள்கிழிக்கப் பாடிவந்தார்; எதிர்ப்பேற்ருர்; மாற்ருர் அருளுக்கோ அன்றிப் புகழுக்கோ எந்நாளும் பொருளுக்கோ பாடாமல் பொய்எதிர்த்தே பாடிவந்தார்; உற்ற தமிழுக்(கு) ஒருதீங்(கு) எனவுரைத்தால் பெற்றபிள்ளை என்ருலும் பின்வாங்க மாட்டாரே! சினம்மாறி விட்டால் சிறுகுழந்தை போலாவார்! மனமாரப் பகைவர்க்கும் இல்லையென மாட்டாரே! உண்மைக்குப் போராட ஒருபோதும் சோர்வடையார்! பெண்மை உரிமைபற்றிப் பேசாத நாளில்லை! சங்கத் தமிழ்ச்சோலைத் தேனைப் பிழிந்தெடுத்துப் பங்கிட்டுத் தந்து பசியாரச் செய்தவராம்! பாட்டுலகில் பாவேந்தர் பாடாத் துறையில்லை! நாட்டுமொழிப் பற்று, நயவஞ்சகர் சூழ்ச்சி, காதல், இயற்கை, கைம்மை, மறுமலர்ச்சி, § ‘. . தீதை எதிர்க்கும் திண்டோள் மறiசம், | لدى مينيسية (كع د لو இன்னும் பலப்பலவாம் எழிற்கவில்தைப் பெருஞ்செல்வம் கன்னற் றமிழ் அவரின் கைப்பாவை என்றுரைப்பேன்! "நம்பிக்கை வைத்தான் நம்பிக்கை வைத்தான்’ தம்பி இதன்பொருளைச் சற்றே விளக்குவையோ? வம்புக் கவரிடத்தில் வந்தவர் மீண்டதில்லை. செம்பொன் கதிரோளும் செந்தமிழ்ப் பாவலரே!
பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/171
Appearance