உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. மாணவர்கள்

அவையடக்கம்
(எண்சீர் விருத்தம்)

பாவேழ வேந்தரெல்லாம் இடைக்கா லத்தே
        பாட்டெழுதத் தொடங்குமுன் ஐந்து கையான்
மூவேழ வேந்தெண்ணிக் காப்புச் செய்யுள்
        முன்கண்டு நூலெழுதத் தொடங்க லானார்!
மாவேழ வேந்தெமது கவிஞர்; நூலில்
        மறுமலர்ச்சி நனி செய்தே மாற்றம் செய்தார்.
காவேழ வேந்தின்றோ தலைவர்; காலம்
        கலிகாலம்! தமிழுக்கென் வணக்க மாமே!

(வெண்கலிப்பா)


கார்பாயும் வானைக் கரைபாயும் நீலநிறச்
சீரார் கடற்பரப்புச் சென்று தழுவுகின்ற
மன்றல் மணிமாடத் தொடுவான் மணவறைக்குத்
தென்றல் மணம்பரப்பும்; செடிகொடிகள் பாட்டிசைக்கும்;
நெய்தற் கரைகள் நீண்ட் முழுவார்க்கும்;
வெய்யோன் வரவை விடிவெள்ளி முன்னுரைக்கும்;
எழில் நிறைந்த வானில் எழும்பரிதி போலப்
பழகு தமிழ் நாட்டுப் பண்பார் புதுவையிலே
பாவேந்தர் தோன்றிப் பைந்தமிழைக் காத்தாரே!
மாவேந்தர் இல்லா மனக்கவலை மாறியதாம்!
கன்னித் தமிழ்த்தாயின் கவின்சேர் திருமுடிக்குப்

பொன் மணிகள் சேர்த்த புதுமுடியைச் சூட்டிவைத்தார்!