இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
173
உங்கட்கு நான் நன்றி கூறும் முன்னர்
ஒன்றிரண்டு நான்கூற ஆசை கொண்டேன்!
இங்குள்ள கவிஞர்க்குத் தமிழில் ஆசை
இருந்தாலும் இருள்கிழித்து வானில் தோன்றும்
திங்கட்கு நாடோறும் வானி ருந்தே
செயல்படுத்தத் தூண்டுகின்ற வெய்யோன் போலப்
பங்கேற்று நல்லூக்கம் தருதல் வேண்டும்!
பண்படையும் திருநாடு! வணக்கம்! நன்றி!
◎
நாள்: 29-4-72 சனிக்கிழமை, காலை 9 மணி.
இடம் : புதுவை காந்தி திடல் - புதுவை அரசு நடத்திய பாரதிதாசனின் 81-வது பிறந்தநாள் விழாக் கவியரங்கம்.
வரவேற்பு: மாண்புமிகு எஸ். இராமசாமி--உள் துறை அமைச்சர், புதுவை அரசு.
தலைப்பு: பாவேந்தர் பாட்டுலகில்-மாணவர்கள்.
தலவர்: திரு. கா. வேழவேந்தன், பி.ஏ.பி.எல். எம்.எல்.ஏ.,
1: 'மாற்றார்..... பாடி வந்தார்' என்பதன் முன், 'என்னைப் போல்' என்னும் தொடரைக் கவிஞரேறு வாணிதாசன் இவ்விடத்து இணைத்துப் பாடிக் காட்டினார்.