உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருத்துரைகளுள் சில



“எல்லாரும் நல்லார்என்(று) எண்ணுவார் இன்றமிழ்
வல்ல கவிவாணி தாசனார்-அல்லும்
பகலும் தமிழர்தம் பண்பாடு பற்றிப்
புகலும் பாட்(டு) ஒவ்வொன்றும் பொன்.”

-பாவேந்தர் பாரதிதாசனர்.


  “திரு. வாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும் என்பது எனது வேட்கை” -திரு. வி. க.
  “மனித சமுதாயத்திற்குப் புதிய புதிய கவிதைகளைப் படைத்துத் தொடர்ந்து நடந்தோரில் வெற்றிகரமாக முன்னேறியவர் தோழர் வாணிதாசன். ...அவரது கவிதைகளைப் படிக்கும்போது சில சமயங்களில் பாரதிதாசனுக்கும் முன்னாலே போகிறார் என்ற எண்ணந் தட்டும்... சொல் வளம், கற்பனை ஊற்று என்ற இரண்டும் வளமாகப் பெற்ற கவிஞர் தோழர் வாணிதாசன்... ‘கவிஞர்கள் பிறக்கிறார்கள்; செய்யப்படுவதில்லை’ என்பது இவர் வரையில் உண்மை. இவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் 'நோபல் பரிசு' பெறக்கூடும்’. -‘தென்ற’லில் கண்ணதாசன்.
  “வாணிதாசனார் பாரதியார், பாரதிதாசன் ஆகிய இந்த இருவரினும் விஞ்சிய வகையில் பாடி வருகின்றார்....இவருடைய பாடல்களை உலகப் பெருங்கவிஞருள் ஒருவரான இரவீந்திரநாத தாகூரின் பாடல்களுக்குச் சமமாகக் கூறலாம். இவர் ஒர் இயற்கைக் கவிஞர்: கவி புனைவதற்காகவே பிறந்தவர். இவருடைய பாடல்கள் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தவை. ...தமிழ் நாட்டிற்குப் பாரதிதாசரும் வாணிதாசரும் இரு கண்மணிகள்.”


-பேராசிரியர், மயிலை. சிவ. முத்து.