உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஒக்கவிருந் துறவாடும் மனையாளும், ஈன்ற
      ஒன்றிரண்டு குழந்தைகளும், தோழர்களும், நானும்
முக்கனியும், மலைமூங்கில் முதிர்ந்தசுவைத் தேனும்,
      முளைத்தெழுந்த செங்கதிரும், வீசுமிளங் காற்றும்,
சொக்கவைக்கும் முழு நிலவும், கடற்பரப்பும், வானும்,
      தோகைவிரித் தாடுகின்ற மயிலினமும், மானும்,
பக்கத்தில் முழவார்க்கும் நீ ளோடை குன்றும்
      பைந்தமிழுக் கீடில்லை; மிகையில்லை; உண்மை! 4

மலைபிறந்த நீளருவி மருதநிலம் பாய்ந்து
      மணிமாடப் பேரூரைப் பொருள் வளத்தைச் சேர்க்கும்
குலைபிறந்த தெங்கிள நீர் வாழையலா மாவும்
      சுவைதேக்கும் நாவிற்குப்; பணைவடிக்கும் கொல்லா
உலைபிறந்த படைக்கலங்கள் அரசழிக்கும்; நாட்டில்
      உண்மையிவை! உண்மையினவ! ஆனாலும், முந்நீர்
அலைபிறந்த மலை பிறந்து வாழ்ந்த தமிழ் மக்கள்
      அளித்த தமிழ் போலெதுவும் நிலைத்ததுண்டோ? சொல்வீர்!

கல்லெழுந்து மண்தோன்றாக் காலத்தே தோன்றிக்
      கற்குகையில் வாழ்ந்திருந்த தமிழ்நாட்டு மக்கள்
நல்லிதழில் நீபிறந்தாய்; தமிழே! நீ வாழி!
      நானென்றும் உனைமறவேன்! நீயின்றேல் வாழ்வு.
செல்லாத காசாகும்! உன்புகழைக் கேட்கச்
      செவிபோதா! வாணாளும் போதாதே! கன்னி
நல்லாயே! கடல்சூழ்ந்த உலகத்(து) யாயே!
      நான் சிறியன்! உன்பெருமை நாடறிந்த உண்மை ! 6

கத்து கடல் ஓரத்தில் உன்னொலியைக் கேட்டேன்;
      கடல் தாண்டி வந்தவர்கள் மேனாட்டார் அன்னோர்
தத்தமது தாய்மொழியை மறந்துன்றன் சீர்மை

      தனைப்புகழ, அட்டாவோ! எனைமறந்து போனேன்!