உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பன்னூலைப் பலமொழியைப் பயின்றே இந்நாள்
       பகுத்தறிவைப் பெற்றுவிட்டோம்; பாரோர் மெச்ச
இந்நாளில் வாழ்கின்றோம்! உலகம் போற்றும்
       எதிர்காலம் பொற்காலம்! இடையில் வந்தோர்
தென்னகத்துத் தாய்மொழியைத் தமிழர் வாழ்வைச்
       சிதைப்பதற்கு முனைகின்றார்; முனைந்தோர் எல்லாம்
என்னானார்? இன்றுநமக் காக வுள்ள
       இலக்கியங்கள் எடுத்துரைக்கும்! தமிழே வெல்லும்! 4

அன்றிருந்த வீரமென்றும் அழிய வில்லை!
       அன்னையர்கள் பொதுப்பணியும் குறைய வில்லை!
மன்றுபயில் நற்கபைகள் கலப்பில் தோய்ந்தும்
       மாத்தமிழின் பண்பைவிட்டு விலக வில்லை!
இன்றுள்ள தமிழகத்தில் கருத்து மாற்றம்
       இருந்தாலும் தமிழ்மொழிக்கிங் கின்னல் என்றால்
ஒன்றாகும் நிகழ்காலத் தமிழ கத்தை
       உலகறியச் செய்திடுவோம் வாழ்த்து வோமே! 5



நாள்: 20—10—1961

இதழ்: ‘கலை’ இதழின் சிறப்பு மலர் ஒன்றில் பெற்ற கவியரங்கம்.

தலைவர்: பாவேந்தர் பாரதிதாசன்.

தலைப்பு: நிகழ்காலத் தமிழகம்.

குறிப்பு: தலைவர் பாவேந்தர். பாரதிதாசன் அவர்கள், இப்பாடல்கள் குறித்து இரண்டு வெண்பாக்கள் எழுதியிருந்தார்கள். அவையாவன: