இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
“எல்லாரும் நல்லாரென் றெண்ணுவார் இன் றமிழ்
வல்ல கவிவாணி தாசனார்—அல்லும்
பகலும் தமிழர் தம் பண்பாடு பற்றிப்
புகலும்பாட் டொவ்வொன்றும் பொன்!”
1
“சார்நிகழ் காலத் தமிழகம் பற்றி
யாரும் தெளிய இனிதுரைத்தார் - பாரில்
கலையின் கவியரங்கின் மேன்மையைக் காத்தார்;
நிலையுணர்ந்து வாழ்க நிலைத்து!”
2