உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

படைவெல்லும்; பாரதத்தின் படையே வெல்லும்!
        பகையொழித்துப் போர்ப்பரணி பாடு வோமே! 14

தாயகத்தில் மாற்றானின் படைபு குந்தால்
        தந்தைதாய் தம்பியர்கள் தங்கை மார்கள்
வாய்மூடிக் கிடப்பாரோ? அன்னோர் கைகள்
        மலர்கொய்யு மோ?சொல்வீர்! நாமெல் லோரும்
பாயாத வேங்கையல்லோம்! எங்கி ருந்து.
        பகைவரினும் பாரதமே என்றும் வெல்லும்!
ஓயாவே நம்கைகள்! தாயகத்தின் வெற்றி
        ஓங்குகவே! போர்ப்பரணி பாடு வோமே! 15

குண்டுக்கு நாமஞ்சோம்; நம்மை யெல்லாம்
        கொல்லவரும் குன்றொத்த ‘டாங்கி’ என்னும்
வண்டிக்கும் நாமஞ்சோம்! நமது வீரர்
        தாயகத்தின் வாழ்விற்கே வாழ்வோர் ஆவார்!
சுண்டைக்காய்ப் பாகித்தான் தூள்! தூள்! தூளே!
        துளிகுருதி நம்முடலில் உள்ள மட்டும்
கொண்டிடுவோம் போர்க்கோலம்! நமக்கே வெற்றி!
        கொல்புலிகாள்! போர்ப்பரணி பாடு வோமே! 16

வடக்கினிலே நாயுண்ணும் குள்ளச் சீனன்
        மலையெட்டிப் பார்க்கின்றான்; மிரட்டு கின்றான்!
கிடக்கின்றான்; நம்படைமுன் அவனென் செய்வான்?
        கீரியின் முன் பாம்பாவான்! எந்த நாளும்
அடக்கமாய் இருக்கின்ற புலியும் பாயும்!
        அழிவுக்கு வித்திட்டால் அழிவே கிட்டும்!
முடக்குவோம் கொடும்பகையை! இன்றே வெற்றி
        முரசார்ப்போம்; போர்ப்பரணி பாடு வோமோ 17

வேற்றுமையை நாமமலலாம ஒதுக்கித் தள்ள

        வெகுண்டெழுவோம்; தாயகத்தில் இன்று வந்த