பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

மாற்றானைப் புறங்காண்போம்; காலை மாலை
        மணிகருதா துழைத்திடுவோம்; நமது மக்கள்
ஏற்றத்திற் குழைக்கின்ற பார தத்தின்
        இன்றுள்ள அரசுக்குக் கட்டுப் பட்டுப்
போற்றிடு வோம்; புதுத்தெம்பை அளிப்போம்; ஆன்ற
        பொருள் தருவோம்; போர்ப்பரணி பாடு வோமே! 18

கன்னியர்கள் காளையர்கள் தாய கத்தைக்
        காப்பதற்கே திரண்டெழுந்தார்; கடலைப் போன்று
முன்னெழுந்து மாற்றானின் படைவந் தாலும்
        முறியடிப்பர்! பாரதமே வெற்றி கொள்ளும்!
என்னருமைத் தாயகமே! உன்னைக் காக்க
        இருக்கின்றோம் நான்குபத்துக் கோடி மக்கள்!
முன்வைத்த கால்பின்னுக் கிழுக்க மாட்டோம்!
        மூண்ட பகை வீழ்த்திடுவோம் வாழ்த்து வோமே! 19
திங்களொளி மாடத்தே கன்னிப் பெண்கள்

சேல்யாய வேல்பாயும் புதுவை மூதூர்
        இங்குள்ள பெரியோரே! தாய்க்கு லத்தீர்!
என்னருமைத் தோழர்களே! இளஞ்சிங் கங்காள்!
        தெங்கிளநீர்ச் சுவைமீறக் கவிதை பாடிச்
செவிகுளிரச் செய்வோரே! முதல மைச்சே!
        எங்களருங் கவியரங்கத் தலைவ! உங்கள்
எல்லார்க்கும் என்வணக்கம்! நன்றி! வாழ்த்தே! 20


நாள்: 23—9—1965.

இடம்: புதுச்சேரி வேதபுரீசுரர் நூல் நிலையம்.

தலைவர்: நீதிபதி திரு. எஸ். மகராசன், பி.ஏ., பி.எல்.

தலைப்பு: பாகித்தான் படையெடுப்பை முறியடிக்கப் பதினான்கு கவிஞர்களின் போர்ப்பரணி.

நடத்தியோர்: புதுவை அரசின் செய்தித் துறையினர்.