பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. வேளாண்மை
(எண்சீர் விருத்தம்)

பார்முழுதும் நல்வாழ்வு வாழ்வ தற்குப்
     பகுத்தறிவு நனிதேவை! வளம்பெருக்கும்
ஏர்முனைக்கும் அதுதேவை! ஏற்றம் சேர்க்கும்
     எத்தொழிற்கும் அதுதேவை! பகைநொறுக்கும்
போர்முனைக்கும் அதுதேவை! உயிரின் மேலாம்
     புகழ்முனைக்கும் அது தேவை! என்றும் எங்கும்
சீர்முனைக்கும் பகுத்தறிவே! அறிவின் ஊற்றே!
     செந்தமிழால் உனைப்பாடி வாழ்த்து வேனே! 1

கவியரங்கப் பெருந்தலைவ! கற்றறிந்த மேலோய்!
     கத்துகடற் சீர்ப்புதுவை முதலமைச்சே! இந்தப்
புவியரங்கப் பெரியோரே! தாய்மாரே! ஆன்ற
     புலவர்காள்! தாய்நாட்டுப் போர்மறவ ரேறே!
செவியரங்கில் தீந்தமிழைத் தாய்மொழியை இன்பச்
     செந்தேனைப் பாய்ச்சுகின்ற கவிக்கூட்டத் தோரே!
கவியரங்கில் என்பாட்டைப் பாடுதற்கு முன்னர்த்
     தலைதாழ்த்திக் கைகூப்பி நான் வணங்கு வேனே! 2

பாற்கடலின் தலையிருந்தான் சீநி வாசன்!
     பைந்தமிழர் கவியரங்கில் இங்குச் சூழ்ந்த
பாற்கடலின் தலையிருந்தான் சீநிவாசன்!
     பாடவந்த வேளாண்மை எனது பாட்டின்
பாற்கடலின் தலையிருந்தான் சீநிவாசன்!
     பண்படுத்தும் முறையுணர்த்தி உழவு செய்யப்
பாற்கடலின் மேலிருந்தான் சீநிவாசன்!

     பகுத்தறிவால் வேளாண்மை வளர்த்த தாமே! 3