39
வான்தோன்றி, மலைதோன்றி, மலைமுகட்டில் மோதும்
வளிதோன்றிக், கடல்தோன் றிக், கடலிடையில் நீண்ட
கூன்தோன்றி, மூளைமதியும் செங்கதிரும் தோன்றிக்,
குளிரடைந்த இவ்வுலகில் உயிரினங்கள் தோன்றிக்
கான்தோன்றி நீளாற்றங் கரையினிலே வாழ்ந்தோர்
கடும்பசிக்குப் போராடி உழைத்துவழி கண்ட
தேன்தோன்றும் நல்லுழவைப் பாடுகின்றேன் உம்முன்!
தெள்ளுதமிழ் நாட்டீரே! கேட்பீரென் பாட்டே! 4
(அறுசீர் விருத்தம்)
வாழும் மக்கட் கறிவூட்டி
வருவதும் உழவின் நற்பவனே!
தாழும் மக்கட் பிணியோட்டித்
தருவதும் உழைப்பின் நற்பயனே!
சூழும் பொருளைப் பெற்றிடவும்.
தூர நாடு சென்றிடவும்;
ஏழை யில்லாச் சமுதாயம்
இயங்கச் செய்வதும் உழலாமே! 5
(எண்சீர் விருத்தம்)
முடியரசர் அந்நாளில் மக்களெல்லாம் ஏய்த்து
முதலில்லா வணிகர் போல் பொருள் பறித்து வாழ்ந்தார்!
தடியரசர் மிரட்டலெலாம் எத்தனை நாள் செல்லும்?
பகுத்தறிவு தலையெடுக்கத் தலையெடுக்க நாட்டில்
குடியரசர் வெகுண்டெழுந்தார்; கொடுமைகளை மாய்த்தார்;
குறையில்லாப் பெருவாழ்வே மக்களர சென்றார்!
குடியரசே அன்றுமுதல்! குடியரசு வாழ்க!
வேளாண்மை முன்னேற்றம் கூறமுனை வேனே! 6
மின் கண்டு வித்திட்டார் முன்னாளில்; செந்நெல்
மிகுவிளைவு கண்டதில்லை! மழைபொய்த்த துண்டாம்!
பின்கண்டார் மழைநாளில் பெய்யுமழை நீரைத்
தேக்குதற்குப் பேரேரி குளங்குட்டை தாங்கல்!