பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 (எண்சீர் விருத்தம்) குடிமக்கள் நல்வாழ்வே குடியரசின் நோக்கம்! நல்லுணவு குடியிருப்பு மக்கிட்குத் தேவை! குடியரசால் இல்லையெனில் செயவல்லார் யாரே? கொடும்பசிதான் இல்லாத உயிரினங்கள் உண்டோ? மடிசுரந்தால் பால்சுரக்கும் பசியற்றுப் போகும்! மக்களெல்லாம் குடியரசை வலுப்படுத்த வேண்டும்! மிடியரசின் வலியடங்கும்! வேளாண்மை செய்வோம்! விளைவோங்கின் ஒங்காத வேறேதும் உண்டோ? 20 உண்டியினைக் கொடுக்கின்ற நல்லுழவன் நாட்டில் உயிர்கொடுக்கும் கிழவனென்றும், பொருள் (கொடுப்போன் என்றும் பண்டிருந்த புலவரெலாம் பறைசாற்றிப் போளுர்! படிக்கின்ருேம்; பார்க்கின்ருேம்! எந்நாளும் உண்மை! மண்டினிந்த நிலம்வாழ, மக்களினம் வாழ, - வானுக்கும் மண்ணுக்கும் வழிப்பாட்டை போட எண்டிசையும் வேளாண்மைப் பெருந்தொழிலைப் பேணி இமைபோலக் காத்திடுவோம்; ஏற்றமடை வோமே!21. உழவாக்கம் இல்லையெனில் உயிராக்கம் உண்டோ? உயிராக்கம் இல்லையெனில் ஊராக்கம் உண்டோ? விழவாக்கம், பொருளாக்கம், வெற்றிமுர சாக்கம், வீரர்களின் தோளாக்கம், வெளியுலக நட்பு, - பழகுமொழிச் சொல்லாக்கம், பகுத்தறிவின் ஆக்கம், பறந்துசென்று நிலவுலகைப் படம்பிடிக்கும் ஆக்கம் அழகுவயல் செந்நெல்லின் அறுவடையால் அன்றி ஆகாதே ஆகாதே ஆகா தாமே! - 22