பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

முன்னாள் முடியரசன் மூதறிவே இன்மையினால்
பன்னாள் பலர் வாழப் பாய்விரித்து விட்டனனே!

பின்னாள் குடியரசர் பேதையரின் மேற்குதிரை
முன்னை விடுதலையின் மூத்தோரின் பேர்சொல்லி

ஏய்த்தார் பலநாட்கள் இந்நாள் நடந்திடுமோ?
மாய்த்தார் அதை;அண்ணா! மக்கள் துயிலெழுப்பும்

நாடகத்தைத் தந்தார்! நமது பழம்பெருமை
ஏடெழுதும் நல்ல இளங்கவிஞர் தந்தாரே!

அண்ணாநல் லாசிரியர்! ஆக்கப் பணிபுரிந்து
மண்ணாளும் நம்மண்ணா வாழியர் வாழியரே!

அண்ணாவின் நாடகங்கள் அத்தனையும் பொற்குவியல்!
கண் திறக்கச் செய்யும்! கருத்தளிக்கும் நன்மருந்து!

பெண்ணுக் குரிமை, நற்பேச்சுரிமை, நாம்வாழும்
மண்ணுக் குரிமை வழங்கும் மலர்க்கைகள்!

எண்ண இனிக்கும் எழிற்கவிதைச் சொற்றொடர்கள்!
புண்ணுக்கு மாமருந்து புத்துலகப் பாட்டை!

பசிக்கேற்ற நல்லுணவைப் பார்த்தூட்டும் அன்னை!
புசிக்கத் தெவிட்டாத புத்தமிழ்தாம்! தேனூற்றாம்!

ஆயிழாய்! என்னின்ப ஆசை மனையாட்டி!
தாய்நாடும் சேயாம் தமிழகத்து மக்களெலாம்!

சூழ்ச்சியால் வீழ்த்தலாம் சுத்தமுட் டாளையென்றே
வாழ்க்கை வகுத்தனர் வந்தவர்! அண்ணாவோ

முட்டாளின் உள்ள முதுகெலும்பைச் செஞ்சொல்லால்
தட்டி யெழுப்பநற் றம்பியரைத் தந்தாரே!

தம்பியர்கள் வாழ்க! தமிழ்வாழ்க! எங்களருஞ்
செம்பொற் கருணா நிதிநீடு வாழ்கவே!