பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. தமிழன்

தமிழ் வாழ்த்து

(குறள் வெண்பா)

உலகம் பிறக்கப் பிறந்த தமிழே!
தலை தாழ்த்தி னேனருளைத் தா!

(அறுசீர் விருத்தம்)

பாமணக்கும் தமிழ்த்தாயே! பயன்மணக்கும்
திருமகளே! பாவாய்! நாளும்
நாமணக்கும் சொல்மணக்கும் நற்றமிழர்
உளம்மணக்கும் நங்காய்! நீயோ
காமணக்கும் மலர்க்கூட்டம்! கனிமணக்கும்
பழத்தோட்டம்! கனிந்த செஞ்சொல்
வாய்மணக்கக் கவிவாணி தாசனுனை
மனமார வாழ்த்தி னேனே!

அவையடக்கம்
(ஆசிரியப்பா)

"யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா"
என்றபூங் குன்றனார் இதயத் தெழுந்த
பொன்னாம் கருத்தைப் புவியில் நிறுத்தும்
உலகத் தமிழர் மாநா டுய்யக்
கலைவளர் தென்னகக் கதிரொளி மானும்
ஆன்றவிந் தடங்கிய அறிவுசால் பல்லோர்
ஈண்டுவந் துளரால் இதயம் கனிந்த
வணக்கம் அவர் தம் வருகைக்கே! மற்றும்