பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


வரிப்பாடல்


குளிரீபூத்த முற்றம், செங்கண்
     குயில் கூவும் சோலை, ஆறு,
தளிர்பூத்த மலையின் சாரல்,
     தனியிடம் கலந்தோர் நெஞ்சம்
களிபூத்த வேட்கை யாலே
     கண்பூக்கக் கவிதை பூக்க
அளிபூத்துக் கருத்து மாற்றம்
     அடைவதே வரிப்பாட் டாமே!

அகப்பாடல்


மின் வந்த இடையார் கண்டு
     வேல்பாய உணர்வும் பாய
முன்வந்த நிலவுக் கன்னி
     முல்லைப்பல் தெரிதல் கண்டே
பொன்வந்த வறியோன் போன்ற
     புலிப்போத்தின் உளத்தின் போக்கைப்
பின்வந்த தனித்த பாடல்
     பிழிந்தூட்டும் அகப்பாட்டாமே!

புறப்பாடல்
(எண்சீர் விருத்தம்)


செல்2லேந்து கிழக்குவான நிறத்துச் சேவல்
     சிறகடித்துக் காலுயர்த்தி மோதக் கண்டும்
மல்லேந்து தோளுடையார் இளைஞர் கூட்டம்
     மன்றத்துப் பெருவெளியில் கூடிக் கூடி
வில்லேந்து கையரொடு வில்லை ஏந்தி
     விளையாடிப் போர்ப்பயிற்சி செய்யக் கண்டும்
சொல்லேந்து நாவுடையார் கவிஞர் உள்ளம்

     தோன்றியதே புறப்பாடல்! அறத்துப் பாடல்