பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மலை தாண்டி வந்தோர், கத்தும்
       மறிகடல் தாண்டி வந்தோர்
அலை தாண்டித் தாண்டி வந்தே
       அரசினை அமைத்துக் கொண்டார்!
விலை தாண்டும் உயிரின் மேலாம்
       செந்தமிழ் மேன்மை யெல்லாம்
கொலை தாண்டிச் சுடரை வீசும்
       குடவிளக் கான தந்தோ!

பாமன்னர் வாழ்வில் தோன்றிப்
       பாரெலாம் இசைப் ரப்பி
மாமன்னர் மடிவ ளர்ந்த
       மங்காத தமிழோ எங்கோ
நாமன்னர் சில்லோர் போற்ற
       நாட்டினைத் துறந்து சென்ற
காமன்னர் போல வாழ்ந்து
       காலத்தைக் கடத்திற் றந்தோ!

கடமையை நன்குணர்ந்த
       கற்றறி மேலோர், தொண்டர்
அடிமையை வீழ்த்த நாட்டில்
       அறப்போரைத் தொடங்க லானார்!
மடமையைக் கண்டு சீறிப்
       பாரதி உள்ளம் நொந்தார்;
படைவாளாம் கவிதை ஏந்தித்
       தமிழர்கள் பக்கம் நின்றார்!

பாரதி கனலைக் கக்கும்
       பாடல்கள் எழுதித் தந்தார்;
ஊர்தில் வாழும் மக்கள்

       உளத்தினில் உணர்வு வீரம்