பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறையி லிருந்து திரும்பியதும் தேச கலத்தினை எண்ணிஎண்ணி அருமை மிகுந்தால் திட்டமெல்லாம் அன்புடன் காந்தி வகுத்தனரே,

  • இந்துவும் முஸ்லீமும் ஒன்றுபட்டால்

இந்திய நாடு பலமடையும். இந்திய காடு பலமடைந்தால், எவருக்கும் காம்அஞ்சத் தேவையில்லை." என்றுகம் காந்தி எடுத்துரைத்தும், இந்துவும் முஸ்லீமும் சண்டையிடக் கண்டு மிகவும் வருந்தினரே. கலகங்கள் யாவும் நிறுத்திடவே, உண்ணு விரதம் இருந்தனரே. ஓரிரு நாட்களா ? இல்லை,இல்லை; எண்ணி இருபத் தொருநாட்கள் இருந்தபின் அமைதி கிலவியதே ! மனைவியும் மக்களும் வீட்டினிலே வயிற்றுக் கில்லாமல் துடிக்கையிலே அனுதினம் கள்ளைக் குடித்துவந்தோர் அதிகம் இருந்தனர் காட்டினிலே. 116