பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவரும் அழைத்திட மாட்டாரோ? என்றே காந்தியும் ஏங்கினரே. ஆங்கிலம் கற்றுக் கொடுத்திடவே ஆசான் ஒருவர் தேவையென அன்ருேர் விளம்பரம் வந்ததுவே. அதனை காந்தியும் கண்டனரே. 'தினமும் ஒருமணி ஆங்கிலத்தைத் தெளிவாய்க் கற்றுத் தரவேண்டும். சம்பளம் எழுபத் தைந்தாகும். தக்கவர் மனுவை அனுப்பிடலாம்.' பேரும் புகழும் மிகமிகவே பெற்றதோர் பள்ளிக் கூடங்தான், இதனை அறிவித் திருந்ததனல் எழுதி அனுப்பினர் காந்தியுமே. 'உடனே வருவீர் நேரினிலே. உம்மைப் பார்க்க வேண்டு' மென பதிலும் வந்து சேர்ந்திடவே பார்க்க விரைந்தனர் மகிழ்வுடனே. 83