பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிமன் றத்தில் தலைப்பாகை நேர்த்தியாய் அணிந்து முதல்முதலில் சாதுவாம் காந்தி நுழைந்தனரே. சட்டெனச் சீறினர், நீதிபதி. “மன்றத்தி லே தலைப் பாகைவைத்து வருவதை நானும் அனுமதியேன். இந்த விகாடியே பாகையைநீர் எடுத்திடு வீர்” என்ருர் நீதிபதி. "இந்தியர் அணிந்திடும் பாகைதனே எடுக்கவே மாட்டேன்’ எனஉரைத்தே அந்த இடம்விட்டு காந்தியுமே ஆத்திர மாக வெளியில்வந்தார். வெள்ளையர் கொடுமையை முதல்முதலில் விரமாய் காந்தி எதிர்த்தனரே. உள்ளம் வெதும்பினர் வெள்ளையர்கள். உவகை அடைந்தனர் இந்தியர்கள். 88