பக்கம்:பாட்டுத் திறன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£14 பாட்டுத் திறன் ஒருவித வரம்புகளுக்குள்ளே அடங்கிவிடுகின்றன. உண்மை யாதெனில், ஒரு குறிப்பிட்ட உறைப்புகளுக்குள் உள்ளக் கிளர்ச்சிகள் ஊக்கி நிலை மதிப்பைப் பெற்றுள்ளன; ஆனால், அவை எப்பொழுதும் அங்ங்னம் இருக்குமென்று சொல்வதற் கில்லை. ஒரு படிவளர்ச்சிக் கொள்கை : உள்ளக்கிளர்ச்சியதுபவத் தின்பொழுது ஒரு குழப்ப உணர்ச்சியும் முடிவுக்கு வராத ஒரு நிலையும் உள்ளன என்று சிலர் வற்புறுத்தியுள்ளனர். உள்ளக் கிளர்ச்சியின் உறைப்பிற்கேற்றவாறு குழப்ப அளவும் முடிவுக்கு வராத நிலையின் அளவும் நேர்ப்பொருத்தத்தில் மாறுகின்றன. மேலும், ஒரு திட்டமான வழியில் செயல் தொடங்கப்பெற்று விட்டால், உள்ளக்கிளர்ச்சி தணிந்து விடுகின்றது என்பதையும் நாம் காணலாம். அன்றியும், படி வளர்ச்சி ஏணியில் கீழே செல்லச்செல்ல நரம்புமண்டலம் சிக்கற் குறைவுட னிருக்கும் பொழுது, உள்ளக்கிளர்ச்சிகள் என்று நாம் வழங்கும் துலங்கல் களின் வகைகள் காணப்பெறுவதே இல்லை. உயிரி நரம்பு மண்டலத்தின் உயர் வடிவங்களை அடைய அடைய உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றத் தொடங்குகின்றன. இந்த நரம்புமண் டலம் திருப்பகிலை' அல்லது தூய்மையான மறிவினை நிலையி லுள்ள நரம்பு மண்டலத்தைப் போல் ஒரு குறிப்பிட்ட துரண்ட லுக்கு ஆயத்தமான" எதிர்வினையைப் பெற்றிருப்பதில்லை. ஆயத்தமான எதிர்வினை இல்லை என்ற நிலையே உயிரிக்கு இன்றியமையாத ஒரு சிக்கலை"த் தருகின்றது. இந்தச் சிக்கல் உயிரியின் எந்த முக்கியமான உயிரியல் அல்லது வளரும் உளவியல் தேவைகளுடன் உறவு கொள்ளும்பொழுது அது மேலும் நெருக்கடியையும் முக்கியத்துவத்தையும் பெறு கின்றது. - உள்ளக்கிளர்ச்சி பற்றிய இக் கொள்கைகளையெல்லாம் ஒருங்குவைத்து ஆராய்ந்து நாம் ஒருவித முடிவுக்கு வரலாம். ஜேம்ஸ்-லாங்க் கொள்கையோ, அன்றி மேற்பூத்தண்டுக் 27, altastiáñā Gavireos. - Evolutionary theory. 28. Beşäušov - Tropistic stage 艺锣。 அறிவினை லை - Reflex stage. 80. * tuäglerer - Ready-made. 31. His ś - Problem.