பக்கம்:பாட்டுத் திறன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் #113

கோலங்கள் இருத்தல்வேண்டும். எனவே, சினத்தையும் அச்சத்தையும் நாம் இரண்டு வேறுபட்ட துலங்கல்களாகத் துய்ப்பதால், அவை இரண்டும் இரண்டு வெவ்வேறு உள்ளுறுப்பு, உடல்மாற்றங்களைப் பெற்றிருத்தல் வேண்டும். ஆனால். உடலியலறிஞரகள் அவை அப்படியன்று என்று கண்டுள்ளனர். பல்வேறு உள்ளக் கிளர்ச்சிகளுடன் நடை பெறும் உடல் மாற்றங்கள் ஒன்று பிறிதொன்றின்மீது படிந்து தம்மொடு தாமாகக் கலந்துள்ளன. சினமும் அச்சமும் கட்டுக் கடங்கா தெழும் பொழுது பெரும்பாலான உள்ளுறுப்புகளின் மாற்றங்கள் ஒரே மாதிரியான கோலங்களைக் கொண்டுள்ளன. ஒரு நிகழ்ச்சியை முழுமையாகக் காணும் நம்முடைய புலனுணர்ச்சியும் அத்துலங்கலை உண்டாக்கும் தூண்டலுமே நம்முடைய உள்ளக் கிளர்ச்சிகளை உண்மையில் வேறுபடுத்திக் காட்டுகின்றன. உள்ளக்கிளர்ச்சி யனுபவத்திலிருந்து கனவுச் செயல்களைத் துண்டித்துக் காட்டும் வாட்சனின் முயற்சியைப்போல் எந்த முயற்சியும் ஒத்துக் கொள்ளத் தக்க நிலையில் இல்லை.

   அவசரக் கொள்கைகள்: பல உளவியலறிஞர்கள் தந்துள்ள விளக்கங்களையெல்லாம் ஒன்று திரட்டி அவசரக் கொள்கைகள் என்ற தலைப்பில் அடக்கலாம். இந்த விளக்கங்கள் யாவும் உள்ளக் கிளர்ச்சிகள் நெருக்கடியான சமயங்களில் அல்லது அவசரமான நிலைமைகளில்தான் உண்டாகின்றன என்பதையே வற்புறுத்துகின்றன. ஓர் உயிரி வெகுண்டெழுவதற்கும் அல்லது வெருவியோடுவதற்கும் தேவையான அதிக அளவு ஆற்றலை உயிரியல் நன்மைக்காக வெளிப்படுத்தவே இந்த அநுபவம் முழுவதும் கணக்கிடப்படுகின்றது. என்றாலும், பல நிலைமைகளில் இத்தகைய ஒரு விளக்கம் முற்றிலும் பொருந்துவதில்லை. கட்டுக்கடங்காத அச்சம் அல்லது சினம் உள்ள பொழுது உள்ளக்கிளர்ச்சியின் உறைப்பு முயற்சி சார்ந்த அமைப்பில் குழப்பத்தையும் ஒழுங்குக் குலைவையும் உண் டாக்கி அதனாலேற்படும் நடத்தை உயிரியின் பாதுகாப்பு அல்லது நன்மைக்கு விரோதமாகப் போய்விடுதலும் கூடும். இவ்வாறு அவசரக் கொள்கைகளின் பல்வேறு வடிவங்களும்

24. அவசரக் கொள்கைகள் - Emergency theories 25. உயிரியல் நன்மை - Biological welfare. 26. முயற்சி சார்ந்த அமைப்பு Conation system. பா.-8