பக்கம்:பாட்டுத் திறன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i fő பாட்டுத் திறன் விளைவுகளே உள்ளக்கிளர்ச்சிகளாக மலர்கின்றன என்று கொள்வதே சாலவும் பொருத்தமாகும். கவிதையைப் படித்து அநுபவிப்பதில் இந்த உள்ளக்கிளர்ச்சிகள் பெரும்பங்கு கொள்வதால் அவைபற்றிய கொள்கைகள் ஈண்டு ஆராயப் பெற்றன. பழந்தமிழர் கண்ட கொள்கை : பழந்தமிழர் உள்ளக் கிளர்ச்சிகளில் பாட்டிற்குச் சிறந்தனவற்றை மெய்ப்பாடுகள் என வழங்கினர். மெய்ப்பாட்டில் உடல்நிலையும்' இன்றியமையாதது என்பதனையும், அவ் வுடல் நிலைகளே அம் மெய்ப்பாடு வெளிப் படுவதற்கு வழியாக அமைகின்றன என்பதனையும் நன்கறிக் திருந்தனர். தொல்காப்பியத்தில் பேராசிரியர் மெய்ப்பாட்டியல்' என்பதற்குப் பொருள் கூறுகின்றபொழுது இக் கருத்தை வெளி யிடுவர். அவர் கருத்துப்படி மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது, உலகத்தார் உள்ள சிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல். அஃது அவரது உடம்பின்கண் தோன்றும் கண்ணிரரும்பல், மெய்ம் மயிர்சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய புறக்குறி களால் காண்பார்க்குப் புலனாகும். இதனைச் சற்று விளக்குவோம். பேராசிரியர் மெய்ப்பாட்டில் நான்கு கூறுகளைக் காட்டுவர். அச்சம் என்ற மெய்ப்பாட்டினைக்கொண்டு இதனை விளக் குவோம். ஒருவன் புலி முதலிய கொடிய விலங்குகளைக் கண்டு அஞ்சிய நிலையில் அவனுள்ளத்திலே இன்னது செய்வதென்று ஒன்றுக்தோன்றாது கலங்கும் கலக்கமும், பின் எவ்வாறேனும் தப்பி மறைதல் வேண்டுமென்ற கருத்தும், அவனது உடம்பின் கண்ணே நடுக்கமும், வியர்த்தலும் உண்டாதல் இயல்பு. இவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலி முதலியன சுவைப்படு பொருள் எனப்படும். அவற்றைக் கண்டது முதல் அவனுள்ளத் திலே நீங்காது கின்ற அச்சம் சுவை எனப்படும். அதுகாரணமாக அவனுள்ளத்திலே தோன்றும் கலக்கமும் மறைதற் கருத்தும் குறிப்பு எனப்படும். அக் குறிப்பின்வழி அவனது உடம்பில் வெளிப்பட்டுத் தோன்றும் நடுக்கமும் வியர்த்தலும் விறல் எனப் படும். விறலை வட நூலார் சத்துவம் என்று வழங்குவர். நடுக்கமும் வியர்ப்பும் ஆகிய சத்துவங்கள் அச்சமுற்றானாகிய 33. *-i- do stap sò "Organic state.