பக்கம்:பாட்டுத் திறன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பாட்டுத்திறன் ஒருதாளின் மிசைகின்று கின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு தாளை யூன்றி யொன்றும் கருதாமல் மனமடக்கி விசும்பின் ஓடும் கதிரவனைக் கவர்வான்போல் கரங்கள் நீட்டி இரு தாரை கெடுங் தடங்கண் இமையா தோரா யிரங்க திருந் தாமரைப்போ தென்ன கோக்கி கிருதாதி பரின்மனுவாய்த் தவஞ்செய் வாரின் நிகரிவனுக் கார்கொலென நிலைபெற் றானே கருந்துறுகல் லெனக்கருதிப் பிடியும் கன்றும் களிற்றினமும் உடன்உரிஞ்சக் கறையான் ஏறிப் பொருந்துமுழைப் புற்றதெனப் புயங்கம் ஊரப் பூங்கொடிகள் மரனென்று பாங்கே சுற்றப் பரிந்துவெயில் நாள்மழைகாள் பனி நாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில் அருந்தவம்முன் புரிந்தோரில் இவனைப் போன்மற் றார்புரிந்தார் சிவசிவவென் றரிய வாறே.'" எனற பாடல்களைப் படித்தவுடன் பொருள் புலனாகும்.(1)மறை வேதம். தேசு- ஒளி, சிலை-வில்; (3) ஊரு- தொடை, விசும்புஆகாயம், இருதாரை - கருவிழி, கிருத அதிபர் - அரக்கர், மனுமனிதர்; (3) துறுகல் - கால்நடைகள் உராயும் கல், பிடி-பெண் யானை, முழை - துளை, புயங்கம்-பாம்புகள் என்ற முறையில் சொல்தோறும் வேறொரு சொல்தோன்றும் சொற்பொருள் முறையை (பதவுரை முறையை) இங்கு நாம் குறிப்பிடவில்லை. பாடல்களின் சொற்களை உணர்ந்தவுடன் அருச்சுனன் பஞ்சாக்கரத்தை ஒதித் திருநீறு பூசிச் சடைமுடியுடன் தவக் கோலத்துடன் திகழ்வதைத் தேவர்கள் யாவரும் கண்டு அதிசயிக்கும் காட்சியை மனம் காண வேண்டும். அடுத்து ஒற்றைக் காலில் கின்று கொண்டு கின்ற காலின் துடையில் இன்னொரு காலை ஊன்ற வைத்துக்கொண்டு இரண்டு கைகளை யும் நீட்டிக் கொண்டு கதிரவனை விழிக்காமல் பார்த்துக் கொண்டு கிற்கும் பார்த்தனின் தோற்றத்தை மனம் காணல் வேண்டும். அதற்குமேல் அசையாது கிற்கும் கரிய உருவத்தை யுடைய விசயனைக் கருங் துறுகல் என்று ஆண்யானைகளும் பெண்யானைகளும் உராயும்காட்சி, அவன் உடலைக் கறையான் புற்று என எண்ணிப் பாம்புகள் ஏறித்தவழும் காட்சி, மரம் என்று பூங்கொடிகள் அவன்மீது படர்ந்து கிற்கும் காட்சி ஆகிய 52. வில்லி பாரதம் , அருச்சுனன் தவநிலை, செய்.37,38, 41,