பக்கம்:பாட்டுத் திறன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 185 வற்றை ஒவ்வொன்றாக மனம் காணல் வேண்டும். இங்ங்னம் பார்த்தனின். தவநிலையின் பல்வேறு கூறுகளை மனம் கண்டு அதுபவித்தல் வேண்டும். கண்ணின்மூலம் பெறும் காட்சிப்புலன் உணர்ச்சிகள் மட்டிலும் சாதாரணமாகச் சொற்களிலிருந்து ஏற்படுவதில்லை. அவற்றுடன் இணைபிரியாத நண்பர்களும் உண்டு. அவற்றுள் தலைமையாக இருப்பது கேள்விப்புலனால் ஏற்படும் சாயல். அஃதாவது, மனக்காது கேட்கும் சொற்களின் ஒலி. சொற்களின் ஒலிப்பினால் ஏற்படும் சாயலும்- இதழசைவுகள், வாயசைவு, தொண்டையசைவு போன்றவை- அஃதுடன் இணைந்து கிற்கும். சொற்களின் கேள்விப்புலனால் ஏற்படும் சாயல்தான் மனச்செயல்களுக்கும் முக்கியமானவை என்பதை வெளிப்படை யாக நாம் அறிவோம்..ஏதாவது ஒரு பாடலை வாய்க்குள் படிக்கும் போது உண்டாகும் மனங்லையை அதையே வாய்விட்டு இசை யேற்றிப் படிக்கும் பொழுது ஏற்படும் மன நிலையுடன் ஒப்பிட்டு இவ்வேறுபாட்டை நன்கு அறியலாம். பெரும்பாலோர். சொற் களை ஒலிக்காமலேயே சொல்லொலிகளை நுட்பமாக உணரும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். சாயல்களின் உணர்ச்சிப் பண்பு கள், அவற்றின் கவர்ச்சி, தெளிவு முழுமையான விவரங்கள் போன்ற கூறுகள் அச்சாயல்களின் விளைவு களுடன் யாதொரு நிலையான உறவினையும் பெற்றிருக்க வில்லை. இந்தக் கூறுகளில் வேறுபட்ட சாயல்களும் அத்தகைய விளைவுகளை உண்டாக்குதல் கூடும். எனினும், சாயல்களின் உணர்ச்சிப் பண்புகளுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் இருந்துவருகின்றது. புலன் உணர்ச்சியுடன் சேர்ந்த எப்பண்பு இத்தகைய விளைவுகளை உண்டாக்குகின்றது என்பதைத் தெளிவாக அறிதல் அரிதாகவே உள்ளது. ஒருகால் இஃது இன்னும் சரியாக நாமறியாத நரம்பியல்" பற்றிய கூறாக இருக்கலாம். இவ்விடத்தில் ஒன்றை நாம் நினைவில் இருத்தல் வேண்டும். அஃதாவது ஒரு சாயல் தெளிவினாலும் ஒளியினாலும் நாம் விரும் பிய விளைவுகளைக் கொடுக்கும் என்று எண்ணும் போக்கினைத் தவிர்க்கவேண்டும். நாம் விரும்பும் விளைவினைத் தருவது உள்ளக் கிளர்ச்சி, அறிவு ஆகியவற்றைச் சார்ந்த எதிர்வினை களின் கட்டுப்பாட்டினைப் பொறுத்தது. சாயல்களை உண்டாக்

  • 8. sreduš - Neurology,