பக்கம்:பாட்டுத் திறன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பாட்டுத் திறன் கும் மனிதர்களிடம் சாயல்களின் தெளிவும் நுட்பமும் அதிநுட்ப மான விளைவுகளை உண்டாக்குகின்றன என்று சொல்லத் தேவையில்லை. சில பெருங்கவிஞர்களும் திறனாய்வாளர்களும் தாங்கள் தரும் சாயல்களின் உறைப்பிற்குப் பெயர்போனவர்கள்; அவர்கள் அவற்றையே சார்ந்தும் நிற்பர். சிலருக்குச் சாயல்கள் பயன்படுகின்றன என்பதை நாம் மறுக்கவில்லை; அவை எல்லோருக்கும் இன்றியமையாதவை என்று கூறுவது தவறு என்பதை எடுத்துக் காட்டவே இவ்வளவு கூறவேண்டிய தாயிற்று. சொற்களின் காட்சிச்சாயலைத் தவிர வேறு இரண்டு சாயல் கள் அவற்றுடன் பிணைக்கப் பெற்றுள்ளன. அவை கேள்விப் புலச் சாயல்," ஒலிப்புச் சாயல்' என்பவை. இவற்றைக் கட்டுண்ட சாயல்கள்" என்பர் ரிச்சர்ட்ஸ். ஒலிப்புச் சாயலைச் சரியாகக் காணல் இயலாது; எனினும், அது கேள்விச் சாயலைப் பெரிதும் பாதிக்கச் செய்கின்றது. சரியாக ஒலிப்பு முறையில் பயிற்சிபெறாதவர் ஒரு பாடலை உரக்கப் படித்த லால், அருவருப்பான கேள்விச் சாயலை உண்டாக்குவதை நாம் அறிவோம்; நாமே அங்ங்னம் படிக்கும்போது நமக்கே அருவருப்பை உண்டாக்கும். வாய்க்குள் பேசும்-அஃதாவது சிந்திக்கும்-நிலையிலும் ஒலிப்புச் சாயல்கள் பெரும்பங்கு கொள்கின்றன என்று உளவியலார் கருதுகின்றனர். நம் சிந்தனையிலும் குரல்வளைத் தசைகள் அசைகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்." மேற்கூறிய இரண்டு சாயல்களைச் சொற்சாயல்கள்' என்றும் வழங்கலாம். இவை இரண்டும் அடங்கிய சொற்சாயல்தான் கவிதையின் முறையனைந்த அமைப்பு" ஆகும். மூன்றாம் கிலை : இரண்டாம் நிலையில் சொற்களோடு தொடர்புற்றுச் சாயல்கள் மனக்கண்முன் தோன்றின. இங்கு 54. Godređừųwž zrus-Auditory image. 5°- 3**4***"*-Articulatory image, 56. கட்டுண்ட சாயல்.Tied images 57. இதனால்தான். சிந்தனையைக் குரல் வளையின் உட்பேச்சு (sub-vocal talking) எனக் குறிப்பிடுபவர் வாட்ஸன் என்ற உளவிய லறிஞர் - 58. G**; *rus-Verbal image 59. ys, pusneni tă asuău-Formal structure,