பக்கம்:பாட்டுத் திறன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாட்டுத்திறன் யடிப்பது. மணியடித்தல்' என்பது நாம் சிந்திப்பதற்குக் காரண மாகின்றது. இதுபோன்றவற்றில் புறவுலகிலுள்ள பொருள் அதைப்பற்றிய எண்ணத்துடன் நேரான உறவு கொண்டுள்ளது. எனவே, (மணியடித்தலால்) மணியடித்தல்' என்ற எண்ணம் இம்முறையில் ஏற்படக்கூடியது; ‘மணியடித்தல்’ என்ற எண்ணம் மணியின் ஒசையினால் விளைகின்ற எண்ணமே யன்றி அதற்கு மேலும் இல்லை, கீழும் இல்லை. ஆனால், பெரும்பாலான எண்ணங்கள், தற்சமயம் நமது புலன் அறிவிற்குள் இல்லாத பொருள்களைப் பற்றியவையே யாகும்; அப்பொருள்கள் கம் உள்ளத்தில் நேரடியான விளைவு களை உண்டாக்குவதில்லை. நாம் ஒரு கவிதையைப் படிக்கும் பொழுது இந்தங்லை தான் ஏற்படுகின்றது. நம்முடைய உள் ளத்தை நேர் முறையில் பாதிப்பவை காகிதத்தின் மீதுள்ள சொற் களே. ஆனால், நம்முடைய உள்ளத்தில் எழுப்பப்பெறும் எண்ணங்கள் அச் சொற்களைப் பற்றியவை அல்ல;ஆனால், அச் சொற்கள் குறிக்கும் பொருள்களைப்பற்றியவை; இப்பொருள் களின் பிரதிநிதிகளாகவே அச்சொற்கள் உள்ளன. எனவே, சிக்தனையைப் பற்றிய காரணத்துவக் கொள்கை (causat theory) சேய்மையினுள்ள இந்தப் பொருள்களுக்கும் அவற்றைப் பற்றிய எண்ணங்களுக்கும் உள்ள உறவினை எவ்வாறு விளக்குதல் இயலும் இந்த உறவினை அறிந்துகொள்ள வேண்டுமாயின் சொற்கள் பொருளை எவ்வாறு குறிக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கற்றல் இல்லையாயின் நாம் சொற் களை மட்டிலுமே எண்ணுவோம். சொற்களைக் கையாளும் செயலைக் கற்பதை எளிதில் பகுத்து ஆராயலாம். பல்வேறு சமயங்களில் ஒரு சொல், ஒரு குறிப்பிட்ட வகைப் பொருள்கள் நம் கண்முன் இருக்கும்பொழுது அவற்றை உணர்த்தப் பயன்படுத்தப்பெறுகின்றது. அதே சொல் பிறகு அக் குறிப்பிட்ட பொருள்கள் கம் கண்முன் இல்லாத பொழுதும் அவற்றை உணர்த்தப் பயன்படுத்தப்பெறுகின்றது. அப்பொருள்கள். நம் கண்முன் இருந்தால் எவ்விதத் தூண்டலை எழுப்புமோ அவ்விதத் தாண்டலை அப்பொருள்களின்றியே இப்பொழுது எழுப்புகின்றது. இது மனச்செயல்களைப் பற்றிய அடிப்படையான சில விதிகளில் ஒன்றினை பொறுத்தது.