பக்கம்:பாட்டுத் திறன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 141 அடுத்து நாம் கண்ணால் காணும் சொற்களுடன் கட்டுண்ட சாயல்களைப் போலவே நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவை விளங்கா நிகழ்ச்சிகளாகிய எண்ணங் களாகும்" நமக்குப் பழக்கமாகவுள்ள ஒரு சொல் கம் கண்ணில் பட்டதும் அது தான் குறிக்கும் எண்ணத்தை நம் மணத்தில் எழுப்பிவிடுகின்றது. இந்த எண்ணமே சில சமயம் சொற் பொருள்" எனக் கூறப்பெறுகின்றது. எனினும், சொற் பொருளைச் சொல்லின் அறிகுறியாகக் கருதாதிருப்பது என்று. 'எண்ணம், கருத்து' என்ற சொற்கள் தெளிவின்மையால் நுட்பமாக அமைகின்றன; அவற்றை வரையறை செய்து கொண்டால்தான் குழப்பமின்றிக் கையாள முடியும். டாக்டர் ரிச்சர்ட்ஸ் சொல்லுக்கு இருப்பதாகக் கூறும் நான்கு பொருள்களையும் மேலே கண்டோம்." அவற்றினை ஈண்டு மீட்டும் நினைவு கூர்க. எண்ணங்களுக்கும் (thoughts) பொருள்களுக்கும் (meanings) இடையேயுள்ள உறவுகளைப் பற்றிய நம்முடைய ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் (speculation's } மெய்ம்மைகள் யாவும் அகக் காட்சியின்' அடிப்படையில் அமைந்தவை. ஆனால், அகக் காட்சியால் கானும் மெய்ம்மைகள் யாவுமே உறுதியுள்ளவை அன்று; கம்பக்கூடிய நிலை பெறா தவை. இவற்றால் வெற்றி காண்பது இல்லாமலும் போய்விடும். சில சமயம் உள்ளத்தில் நடை பெறும் நிகழ்ச்சிகளுக் கிடையே யுள்ள உறவுகளைக் கண்டறிவதில் அகக்காட்சி திறனுடையதாக இருக்கலாம்; ஆனால், இந்த நிகழ்ச்சிகள் புறவுலகினுடன் என்ன உறவுகளைக் கொண்டுள்ளன என்பதைப் பற்றிய தகவலை அதனால் தர இயலாது. எண்ணத்திற்கும் பொருளுக்கும் உள்ள உறவினை ஆராயும் நாம் இதைத் தான் என்னவென்றுதெளிவாக அறிய விரும்புகின்றோம். உள்ளத்திலுள்ள கிகழ்ச்சிகட்கும் புறவுலகிலுள்ள கிகழ்ச்சி கட்கும் காரணத்துவ (causai)உறவுகள் நிலவுகின்றன என்பதில் யாதோர் ஐயமும் இல்லை. சிலசமயம் இந்த உறவுகள் மிகவும் எளிமையானவை. எடுத்துக்காட்டாகச் சுவர்க் கடிகாரம் மணி 65. sfion disa staġ#3 - Mysterious event. 66. sororoasir - Thoughts, 67. Garfigurðsir - Meaning. 68. ® ® ® ® - Symbol. 69. *G#Gt - Idea 70, இந்நூல் பக்கம் 13: 71. -9 * #3, o i-st - introspection