பக்கம்:பாட்டுத் திறன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பாட்டுத் திறன் பெருங் திண் நெடுமால் வரைகிறுவிப் பிணித்த பாம்பின் மணித்தாம்பின் விரிந்த திவலை யுதிர்த்தமணி விசும்பின் மீனின் மேல் விளங்க அருந்த அமரர் கலக்கிய காள் அமுது கிறைந்த பொற்கலசம் இருந்த திடைவங் தெழுந்ததென எழுந்த தாழி வெண்டிங்கள் கீத்த மதனின் முளைத்தெழுந்த நெடுவெண் திங்கள் எனுங் தச்சன் மீத்தன் கரங்கள் அவைபரப்பி மிகுவெண் கிலவாம் வெண்சுதையால் காத்த கண்ணன் மணியுந்திக் கமல காளத் திடைப்பண்டு பூத்த அண்டம் பழையதென்று புதுக்கு வானும் போன்றுளதால் ' 'திரிவிக்கிரமாவதாரம் செய்த திருமால் மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைத் தாம்பாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த காலத்தில் வெளியிலே தெறித்துப் பரவிய பால் துளி களும் பாம்பின் வாயினின்றும் உதிர்ந்த மணிகளும் விண்ணி டையே பரவிகிற்க, அக்கடலினிடையே அமுதம் நிறைந்த பொன் மயமான கலசம் தோன்றியதுபோலக் கடலினின்று முழுமதியம் எழுகின்றது. முழுமதியமாகிய தச்சன், பண்டைக் காலத்தில் திருமாலின் திருவுந்தியில் தோன்றிய அண்டகோளமாகிய வீடு இப்பொழுது பழையதாகிவிட்டது எனக் கருதித் தன் கதிர்க ளாகிய கைகளை வானமெங்கும் பரப்பி வெள்ளிய கிலவாகிய வெண்ணிறச் சுண்ணச் சாங்தினால் புதுப்பித்தலைப் போன் றுள்ளது' என்பது பாடல்களில் உணர்த்தப்பெற்ற பொருள். இம்மாதிரி கண்ணாற் கானும் நிகழ்ச்சிகளையே இரசவாதம்” செய்து உணர்ச்சிப் பெருக்குடன் கற்பனை கயத்துடன் வெளி யிடுவதுதான் கவிதை என்று கூறவேண்டும். கவிதைக்குரிய பொருள் : கவிதைக்குரிய பொருளில் வரை யறையே இல்லை. எந்தப் பொருளைப்பற்றி வேண்டுமானாலும் கவிதை தோன்றும், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர் களும், 4. பாலகாண் - மிதிலை.-70 . 5. டிெ, செய். 74.