பக்கம்:பாட்டுத் திறன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் t?"3 நாமும் சிறுவர்களாக இருந்தபொழுது அவ்விளையாட்டிலும் ஈடுபட்டிருந்திருக்கின்றோம். வானவெளியில் எண்ணிறந்த அண்டங்கள் வெவ்வேறு வேகத்தில் சுழன்றுகொண்டும், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டும் உள்ளன என்பது வானியல் உணர்த்தும் ஒர் உண்மை, அலகிலா விளையாட்டுடை ஆண்ட வன் சாட்டைத் துணையின்றியே இத்தனை அண்டங்களையும் ஆட்டி வைக்கின்றான்; வான் வெளியில் பம்பர விளையாட்டு விளையாடுகின்றான். கவிஞன் ஒருவன் இக்காட்சியை, சாட்டி கிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல் ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார்." என்று கூறுகின்றான். அண்டங்கள் சுழல்வதையும் பம்பரம் சுழல்வதையும் ஒப்பிட்டுள்ள முருகுணர்ச்சியை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். எனவே, கற்பனையாற்றல் இலக்கியத்திற்குக் கருவூலமாகவும் இன்றியமையாததாகவும் உள்ளது என்பது பெறப்படுகின்றது. தனிப்பாடல்களாக இருப்பினும் சரி, பெருங் காவியமாக இருப்பினும் சரி, நாடகம் அல்லது சிறு கதை யாக இருப்பினும் சரி, கற்பனைப் பண்பு அனைத்திற்குமே இன்றியதிையாதது. உணர்ச்சிகளின் நிலைக்களனாக எழுதப் பெறும் எல்லாவகை இலக்கியங்களுக்குமே கற்பனையாற்றல் மிகமிக அவசியமாகும். கவிஞன் கற்பனை செய்தல் பகற்கனவு காண்பதையொத் தது. கனவு காண்பவர்கள் உள்ளதை உள்ளவாறு காண்ப தில்லை; உள்ளம் விழையுமாறே இரண்கின்றனர். கடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றின் அடிப்படையின்மேல் நடக்க வேண்டிய வற்றைச் சேர்த்துக் காண்கின்றனர். கடக்கவேண்டியவற்றிலும் தம் உள்ளம் விரும்பும் வகையில் அமைத்துக் காண்கின்றனர். அப்பொழுது தான் மனம் அக்கனவில் நெடுநேரம் திளைத்து இருக்கமுடியும். கவிஞர்களும் வேறு கலைஞர்களும் படைக்கும் கற்பனையிலும் இதே நிலைதான். உள்ளம் விரும்புமாறு படைக்கும் உணர்ச்சியே பாட்டு, ஓவியம் முதலிய கலைகளுக்கு அடிப்படையாகும். இயற்கையைப் பாடும் கவிஞர்களும் 4. குற்றாலக் குறவஞ்சி செய்-107