பக்கம்:பாட்டுத் திறன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 7. களை ஒருநாளும் எல்லை கட்டி வரையறுத்துப் பேசமுடியாது என்பது தெளிவாகப் புலனாகும். இந்த உணர்ச்சிகளைப் பற்றி மேனாட்டு உடலியலறிஞர்களும் உளவியலறிஞர்களும் ஆராய்ந்து அறிவியலடிப்படையில் சில கருத்துகளைத் தெரிவித் துள்ளனர். அவற்றை ஒரளவு தொகுத்து வகைப்படுத்தி ஆறு இயல்களில் இந்நூல் கூறுகின்றது. . - உடலும் உள்ளமும் கன்னிலையில் உறவு கொண்டிருந்தால் தான் கல்லுணர்ச்சிகள் தோன்றி, கவிதையை அநுபவிப்ப தற்குத் துணை செய்யும். உணர்ச்சிகளின் திரட்சியே மேலீடான மன உணர்ச்சிகள். இவையே நம்மைக் கவிதைகளை படிக்கத் துண்டுபவை. உணர்ச்சிகளே மீப்பண்புகளுக்கும் காரணமாக இருப்பவை. இவற்றின் காரணமாக நாம், பல்வேறு கவிதை களைப் படிக்கின்றோம். இவற்றைப் படித்து அநுபவிப்பதற் கேற்ற மன நிலைகளையும் பெறுகின்றோம். இத்தகைய உணர்ச்சிகள், உள்ளக்கிளர்ச்சிகள் ஆகியவையற்றி இந்நூல் விரித்துப் பேசுகின்றது. இவற்றை உளவியல், உடலியல் பற்றிய அடிப்படை அறிவின்றி அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆகலின், அவைபற்றிய அறிவு வாய்க்கப்பெறாத வர்களும் ஒரளவு நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக் கத்துடன் உணர்ச்சி பற்றிய செய்திகளனைத்தும் சற்று விரிவா கவே கூறப்பெற்றுள்ளன. உணர்ச்சிகள், உள்ளக் கிளர்ச்சிகள் இவைபற்றிய மேனாட்டறிஞர்களின் பல்வேறு கொள்கை களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கவிதையதுபவம் இன்ன முறையில்தான் நம்மிடம் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இவை ஓரளவு துணைசெய்யும். வாழ்க்கையில் நமக்கேற்படும் உணர்ச்சிகட்கும் கவிதைகளில் நாம் பெறும் உணர்ச்சிகட்கும் வேறுபாடு காட்டப் பெற்றுள்ளது. காம் கவிதையைப் படித்துத் துய்ப்பது தூண்டல்-துலங்கல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. வெளியுலகிலுள்ள பொருள்கள் நம் புலன்களைத் தாண்டுவதால்தான் நாம் செய்தி களை அறிந்து கொள்கின்றோம்; இதைத் தவிர, நமக்குக் கருத்து நிலைச் செயல்களாலும் தாண்டல்கள் ஏற்படுகின்றன. ஒரு கவிதையைப் படிக்கும்பொழுது இவ்வகைத் தாண்டல்களே நமக்கு ஒருவிதக் கிளாச்சியைத் தருகின்றன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/19&oldid=812432" இலிருந்து மீள்விக்கப்பட்டது