பக்கம்:பாட்டுத் திறன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாட்டுத் திறன் வேறுபாடு தரத்தில் உள்ளது. அங்ங்னமே ஒரு மோட்டார் வண்டியை அதன் பொறி நுட்பம் முதலியவற்றை கன்கு அறிந்துகொண்டு கடவுவதற்கும், ஒன்றுமே யறியாது இயக்கும் முறைகளை மட்டிலும் அறிந்துகொண்டு கடவுவதற்கும் வேறு பாடு இல்லாமல் இல்லை. இதனை மனத்தால் உணரவேண்டுமே யன்றிச் சொற்களால், தருக்க முறைகளால், புரிந்துகொள்ளச் செய்தல் முடியாது. எல்லாவித அறிவியல் உண்மைகளை அறிந்துகொண்டு ஆண்டவனின் படைப்புத் திறத்தை உணர்வ தற்கும் வெறும் கற்பனையிலேயே அதனை உணர்வதற்கும் வேறுபாடு உண்டு. ஐன்ஸ்டைன் என்ற அறிவியல் மேதை, உண்மையான அறிவியலறிஞன்தான் ஆண்டவன் படைப்பின் விளங்காப்புதிரையும் சமயங்களின் உண்மைகளையும் கன்முறை யில் உணரமுடியும் என்று ஓரிடத்தில் கூறியிருப்பதை ஈண்டு நினைவு கொள்க. இக் காரணத்தால்தான் கவிதைபற்றிய செய்திகளும் அதனுடன் தொடர்பு கொண்ட உணர்ச்சி பற்றிய செய்திகளும் இந் நூலில் ஆராயப்பெறுகின்றன. நூல் நுவலும் பொருட் பாகுபாடு; பா ட் டு த் தி ற ன் என்னும் இந்நூல் பாட்டுத் திறனை மூன்று பகுதிகளாகப் பிரித்துரைக்கின்றது. முதற்பகுதி உணர்ச்சியின் தத்துவத்தை எடுத்தியம்புகின்றது. இரண்டாம் பகுதி கவிதையின் தத்து வத்தை ஓரளவு விரித்துரைக்கின்றது. மூன்றாம் பகுதி புதுக் கவிதையின் தத்துவத்தை ஒரளவு விளக்குகின்றது. கவிதை யதுபவம் பெறுவதற்கு இம்மூன்று தத்துவங்களும் மிகவும் இன்றியமையாதவை என்பது இந் நூலாசிரியனின் கருத்து. உணர்ச்சியின் தத்துவம் கவிதையின் உயிர் போன்ற பகுதி அதில் பொதிந்துள்ள உணர்ச்சி. உணர்ச்சியில்லாத கவிதை வெற்றென த் தொடுக்கப் பெற்ற ஒரு சொற்கோவையே. நம்மிடம் தோன்றும் உணர்ச்சிப் பெருக்கை நாம் ஆராய்ந்து பிரித்துப் பார்க்க முனைந்தால் அஃது. இயலாத செயலாக முடியும். கடலலைகளையாவது ஒருவித மாக எண்ணி முடிவு கட்டலாம் எனத் தோன்றும்; நம் உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/18&oldid=812411" இலிருந்து மீள்விக்கப்பட்டது