பக்கம்:பாட்டுத் திறன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 188 உண்ணுக் தன்மைய ஊன்முறை தப்பிடின், உடனே மண்ணில் கின்றமால் யானையை வாயிடும் பசியார், தண்ணின் நீர்முறை தப்பிடின் தடக்கையால் தடவி விண்ணின் மேகத்தை வாரி, வாய்ப் பிழிந்திடும் விடாயர்' என்று காட்டுவான். இப்பெரும் படையை இராமன் ஏழரை நாழிகை நேரத்தில் மாய்த்தொழித்து விடுகின்றான். இராக்கதக் காடு முழுவதும் அழிந்துபடுகின்றது. கைவேறு, கால்வேறு, தலைவேறு, உடல்வேறாக அரக்கர்கள் மாய்ந்துகிடக்கின்றனர். இந்நிலையைக் கவிஞன் ஒர் உயர்ந்த கற்பனையால்-தன்மைத் தற்குறிப்பேற்ற அணியால்-காட்டுகின்றான். கருவுற்ற முட்டையில் உயிர் அணுக்கள் ஒன்று இரண்டாக, இரண்டு. நான்காக, நான்கு எட்டாக, இவ்வாறு இரட்டித்துப் பெருகு கின்றன என்பது உயிரியல் காட்டும் உண்மை. கருவுற்ற முட்டையினுள் சின்னாட்களில் கோடிக்கணக்கான அணுக்கள் கிரம்பி அம்முட்டை, உயிரணுக்கள் கிரம்பிய பந்துபோல் ஆகின்றது. இதை நினைவில்கொண்டு கவிஞன் தன் கற்பனையை அமைக்கின்றான். இவ்வண்டங்களையும் அவ்வண் டத்தின் நிலைப்பொருள் சிலையியற் பொருள்கள் முதலியவற் றையும் படைக்கும் நான்முகன் அப்பொருள்கள் கருகிலையில் (உயிரணுக்கள் கிலையில்) இருப்பதைக் கண்டு அவற்றைத் தான் படைத்த முட்டை வடிவம்போன்ற இவ்வண்டத்தினுள் பெய்து குலுக்குகின்றான். இந்த அண்டம் முட்டை யோட்டி னையும், இறந்துகிடக்கும் உடலங்கள் உயிரணுக்களையும் ஒத்துள்ளன. இக்காட்சியை மனத்திரையில் அமைத்துப் பார்ப்பது கடினம். அமைத்துப் பார்க்க முடிந்தால், கம்பனது கற்பனைத்திறன் ஒருவாறு, புலனாகும்; அக்கற்பனையும் நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும். கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற சண்டப்போர் அரக்கர் தம்மைத் தொடர்ந்துகொன்றமைந்த தன்மை 19. மூலபல வதை-9