பக்கம்:பாட்டுத் திறன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் வளம் முன்னோர் இயலில் சொற்கள் கருத்துககளை உணர்த்து வதற்குரிய குறியீடுகள் என்றும், அவற்றின் பண்புகள் யாவை என்றும் கண்டோம். இச்சொற்களைக் கொண்டே கவிஞன் தன் கற்பனைத் திறனால் கவிதைகளைப் படைக்கின்றான். இக்கருத்தை நன்னூலாரும், "பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு ' (பனுவல்-கவிதை) என்று கூறியிருத்தலைக் காண்க. உரைநடையில் ஆளப்பெறும் சொற்களுக்கும் கவிதையில் கையாளப்பெறும் சொற்களுக்கும் வேற்றுமை இல்லை. கவிஞன் அந்தச் சொற்களைக் கையாளும் முறையில்தான் இவ்வேற்றுமை உள்ளது. ஒவ்வொரு சொல் லுக்கும் உரிய நேரான பொருளைத் தவிர, வழி வழியாக அந்தச் சொற்கள் ஆளப்பெறும் இடங்களின் தொடர்பால் அவற்றுடன் சேர்ந்தமைந்த கருத்துகளும் உள்ளன. அன்றியும் சொற்கள் தமக்கென்றமைந்த ஒலித்தன்மையும், வல்லின மெல் லின எழுத்துகளுக்கேற்ப உணர்ச்சியுடன் சேர்ந்து ஒலிக்கும் தன்மையும் பெற்றுள்ளன. எனவே, கவிதைகளில் சொற்கள் அமையும்பொழுது இடத்திற்கேற்றவாறும், சக்தர்ப்பத்திற் கேற்றவாறும், உணர்ச்சிக்கேற்றவாறும், சுவைக்கேற்றவாறும் அவை அமைந்து கவிதையைப் பொலிவுடையதாக்குகின்றன. இச் சொற்களை மேற்கூறியவாறு கையாளுவது கவிஞனின் திறனைப் பொறுத்தது; அவனது மேதைத் தன்மையைப் பொறுத்தது. கம்பன் போன்ற கவிஞர்கள் சொற்களைக் 1. இயல்-7; பக்கம் (119.188), 2. நன்னூல்-சூ.-24