பக்கம்:பாட்டுத் திறன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் ig5 தேனடைந்த சோலைத் திருகாடு கைவிட்டுக் கானடைந்தேன் என்னத் தரியாது காவலரீ வானடைந்தாய் இன்னம் இருந்தேன்நான் வாழ்வுகந்தே ஊனடைந்த தெவ்வர் உயிரடைந்த ஒள்வேலோய்.” என்ற பாடலையும், கையா கின்றனன் கானிருந் திங்கன் மெய்வானோர்திரு நாடு மேவினாய் ஐயா நீயென தாவி யென்றதும் பொய்யோ பொய்யுரை யாத புண்ணியா?” என்ற பாடலையும் ஓசையுடன் படித்தால் அவை யிரண்டும் முறையே இராமனது துயர வுணர்ச்சியையும் தாரையினது துயர வுணர்ச்சியையும் புலப்படுத்துவதை அறியலாம். உயர்ந்த உணர்ச்சி சிலையின்பொழுது கவிஞர்களுக்குத் தாமாகவே தக்க சொற்கள் வந்து அமைந்து ஏற்ற பொருளையும் ஒலியையும் பயந்து கிற்கும். வெகுளி, இரக்கம், பெருமிதம் முதலான உணர்ச்சிகளுக் கேற்றவாறு சொற்கள் அமைந்து அவையே கவிதைகளைக் கற்பவரின் மனத்திலும் அதே உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாக விளங்கும். அவை அந்தந்த உணர்ச்சி களுக்கு ஏற்றவாறு வன்மை மென்மை ஒலிகளையும் பெற்றுக் கற்போரின் உணர்ச்சிகளைத் துண்டவல்லனவாக அமையும். சொல்வோன் குறிப்பால் பெறுவது : சொற்கள் பொருனை என்னதான் தெரிவித்த போதிலும் மனத்திலுள்ள கருத்துகள் யாவும் சொற்களில் அடங்கிவிடும் எனக் கூறுதல் இயலாது. ஆனால், கவிதையில் பயின்றுவரும் சொற்கள் பொருட் செறிவு மிக்கவை. காரணம், அவை ஏற்கெனவே பல கவிதைகளில் பயன் படுத்தப் பெற்றுள்ளமையின் கற்பனைச் செறிவும் பொருள்வள மும் உடையவையாக உள்ளன. சொற்கள் பொருள்ை நேரடியாக வும் மறைமுகமாகவும் தெரிவிக்கின்றன. பழக்தத்திலுள்ள ஒவ் வொரு சொல்லுக்கும் இத்தன்மை உண்டு, இதன் அளவையும் ஓரளவு அறுதியிட்டுவிடலாம். நாடோறும் நாம் வழங்கிவரும் சொற்கள் கூட இவ்வாற்றலைப் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக, 21. அயோத்-திருவடிசூட்டு-ேே. 22. கிட்கித் - தாசைபுலம்புறு-9