பக்கம்:பாட்டுத் திறன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பாட்டுத் திறன் ஈட்டு புகழ்நந்தி பான! நீ எங்கையர்தம் வீட்டிருந்து பாட விடிவளவும்-காட்டிலழும் பேயென்றாள் அன்னை; பிறர்கரியென் றார்,தோழி காயென்றாள், நீயென்றேன் நான்.” என்ற பாடலில் சாதாரணச் சொற்கள்தாம் பயின்று வங் துள்ளன. இது தன் கணவனுக்குப் பரத்தைமைக்கு வாயிலாக அமைந்த பாணனைத் தலைவி பழித்துரைப்பது. பாட்டு கம் முடைய நகைச்சுவைக்கு விருந்தாக அமைந்து இன்பந்தரினும், பாணனுக்குத் துன்பங்தான் தரும் என்பதைச் சொல்லவேண்டா, பழித்துரைப்பது வெளிப்படையாகத் தெரியாவிடினும் தலைவி யின் குறிப்பு அதனைப் புலப்படுத்துவதை அறிக. மொழி எண்ணத்தை வெளியிடும் கருவி என்பதை நாம் அறிவோம். கவிதையில் எண்ணங்கள் என்பவை உணர்ச்சிக்கு அடிப்படை யாக வுள்ள அநுபவங்களே. இங்ங்ணம் மொழிவடிவாக நம்முள் புகும் எண்ணங்கள் அங்கு மீண்டும் அநுபவத்தைத் தூண்டு கின்றன. சொற்கள் எந்த அளவு அநுபவத்தைத் தாண்டக்கூடும் என்பது அவை தோன்றும் சூழ்நிலையைப் பொறுத்தது. பாடினவன் மனக்குறிப்பும் கவிதை அறிவுறுத்த வந்த கருத்துமே சூழ்நிலை என்பது. இந்த இரண்டையும் மேற்குறிப்பிட்ட பாடலிலிருந்து அறிக. கவிதை மதிப்புடைய சொற்கள் : கவிதையில் பயி லும் சொற்களைத் தனித்தனியாக எடுத்துப் பார்க்கும் பொழுது, அவை தரும் பொருள் வேறு; அன்ை ஏனைய சொற்களுடன் உறவுகொண்டு மனத்தில் படும் பொழுது தரும் பொருள் வேறு. எனவே, கவிதையின் முழுக் கருத்தையும் உளங்கொள்ளாமல் சொற்பொருளை மட்டிலும் ஆராய்தல் பெருந்தவறு. கவிதையில் பயிலும் சொற்களுக்கென்று தனி ஒசையும் இல்லை; பொருளும் இல்லை. பல சொற்கள் கவிதையில் உறவுகொள்ளும் பொழுதுதான் அவை பொருட் சிறப்பைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக ஊர், கேளிர், யாதும் என்ற சொற்கள் நாம் அறிந்தவையே; அகராதியில் இவற்றிற்குப் பொருள் எழுதப் பெற்றிருக்கும். ஆனால் கவிஞன் ஒருவன், - யாதும் ஊரே யாவரும் கேளிர்* 28. 5. ສລູບສ u-106. 24, u ໖-192