பக்கம்:பாட்டுத் திறன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 9 பற்றிய கருத்துகள் பெரும்பான்மையான படிப்போர்கட்குப் புதியனவாக இருக்கக் கூடுமென்று கருதி அவை சற்று விரிவாக வும் விளக்கமாகவும்-இந்நூலுக்கு அவை இடைப்பிறவரலாக, இருக்குமோ என்று கருதும் அளவுக்குக்-கூறப்பெற்றுள்ளன. எனவே, இந் நூலினைப் படிப்பவர்கள் நூலின் இப்பகுதியை ஒரு முறைக்குப் பலமுறை ஊன்றிப்படித்து அக் கருத்துகளைத் தெளிவாக உளங்கொண்டால்தான் கவிதையதுபவம் ஏற்படும் அடிப்படைக் கருத்துகளை நன்றாகப் புரிந்து கொள்ள இயலும். கவிதையின் தத்துவம் ஏதோ ஒருவகையான உண்மையை அடிப்படையாகக் கொண்டு செஞ்சொற்களால் உள்ளங் கவரும் முறையில் உயர்ந்த கவிதையை உண்டாக்குபவனே கவிஞன். இளங்கோ ஒரு கவிஞன், கம்பன் ஒரு கவிஞன், சேக்கிழார் ஒரு கவிஞன். உலகத்திற்கே மாபெரும் உண்மைகளை உணர்த்திய வள்ளுவன். ஒரு மாபெருங் கவிஞன். இவர்கள் இயற்றிய கவிதைகட்குத் தத்துவம் உண்டு. இக் கவிதைகளைப் படிப்பவர்கள் அக்கவிஞர் கள் உணர்த்தும் உண்மையில் ஓரளவாவது ஈடுபடுவர் என்பது ஒருதலை. கவிதையின் கத்துவத்தில் கவிதையின் இலக்கணம், கற்பனை, சொல்வளம், ஒலி நயம், யாப்பு முறை. அணிகலன், தொடை நயம், படிமங்கள், சுவைகள், கவிதை கூறும் உண்மை போன்ற பொருள்கள் அடங்கும். இவற்றை ஒரு சிறிது விளக் கினால் கவிதையின் தத்துவத்தை விளக்கியதாக அமையும். இந்த விளக்கம் பாட்டதுபவத்திற்கும் துணை புரியும். எனவே, இவற்றை ஒவ்வொன்றாக ஒரு சிறிது விளக்குவோம். இக் நூலினுள் இவை விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. கற்பனை : கற்பனை என்பது கவிதையின் இன்றியமையாத ஒரு கூறு. இயற்கையைப் பாடும் கவிஞர்களும் உள்ளதை உள்ளவாறு பாடுவதில்லை. தாங்கள் விரும்புமாறு சிலவற்றைக் கூட்டியும் சிலவற்றைக் குறைத்துமே பாடுகின்றனர். இதனால் தான் அவர்களுடைய கவிதை கலைப்பண்புடன் அழியா வாழ்வு பெறுகின்றது. எனவே, உள்ளவாறு அமையும் கற்பனையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/21&oldid=812477" இலிருந்து மீள்விக்கப்பட்டது